பக்கம் எண் :

38

எனவரும் தொல்காப்பியத்தானுணர்க.           (அகத் - சூ - 50)

     இராமாயணம் முதலிய காப்பியங்களில் இராவணன் முதலிய
காமுகர் செயல்களாலும்,

உண்ணின்றுருக்கும் என்பதனை,

         “இணரார் நறுங்கோதை எல்வளையாள் கூட்டம்
          புணராமற் பூசல் தரவும்-உணராது
          தண்டா விழுப்படர் நலியவும்
          உண்டால் என்னுயிர் ஒப்புதற் கரிதே”
   
                                    --புறப் - வெண் - 212

எனவரும் ஆண்பாற் கைக்கிளையானும்;

         “பிறைபுரை வாணுதல் பீரருப்ப மென்றோள்
          இறைபுனை யெல்வளை யேக-நிறைபுணையா
          யாம நெடுங்கடல் நீந்துவேன்
          காம வெள்ளெரி கனன்றகஞ் சுடுமே”


எனவரும் பெண்பாற் கைக்கிளையானும்,

         “கூலத்தா ருலக மெல்லாங் குளிர்ப்பொடு வெதுப்பு நீங்க
          நீலத்தா ரரக்கன் மேனி நெய்யின்றி யெரிந்த தன்றே
          காலத்தால் வருவ தொன்றோ காமத்தாற் கனலும் வெந்தீச்
          சீலத்தா லவிவ தன்றிச் செய்யத்தா னாவ துண்டோ”


எனவரும் கம்பர் கூற்று முதலிய காவியச் செய்யுள்களாலு முணர்க.

    
     “காமத்திற்குக கண்ணில்லை” என்பது ஒரு மூதுரை,
          காமுறுவாரை நரகத்தில் வீழ்க்கும் எனினுமாம்.       (26)


27.            இதுவுமது

சான்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்
  ஆன்றாங் கமைந்த குரவர்மொழி கோட லீயார்
வான்றாங் கிநின்ற புகழ்மாசு படுப்பர் காமன்
தான்றாங் கிவிட்ட கணைமெய்ப்படு மாயி னக்கால்.

     (இ - ள்.) காமன்தான் தாங்கிவிட்ட கணைமெய்ப்படு ஆயின்
அக்கால் - காமவேள் தன் கையிலேந்திக் கருப்புவில்லிறொடுத்து எய்துவிட்ட
மலர்க்கணை காமுகர் மார்பிற்பட்டபொழுது சான்றோர் உவர்ப்ப -
பெரியோர்கள் தம்மை வெறுத்தொதுங்க நிற்பவும்; தனி நின்று-தமக்குப்
பற்றுக்கோடாவாரையும் இழந்து தனித்து நின்று; பழிப்ப காணார் - இவ்வுலகம்
தம்மைப் பழி