பக்கம் எண் :

39

தூற்றலும் அறியாவாய்; ஆன்று ஆங்கு அமைந்த குரவர் மொழி கோடலியார்
- கல்வி கேள்விகளானிரம்பி அவற்றிற்கியைய அடங்கிய தம்மாசிரியருடைய
மொழிகளையும் ஏற்றுக்கொள்ளாராய்; வான் தாங்கி நின்ற புகழ் மாசுபடுப்பர்
- தான் பிறந்த குடியினுடையவும் தம்முடையவுமாகிய பெருமைமிக்க
புகழையும் கெடுத்தொழிவர். அத்துணைத் தீயதாம் காமம் என்பதாம்.


     (வி - ம்.) இது, காமத்தால் வரும் கேட்டினை அறிவுறுத்தியதாம்.
காமத் தீவினையுடையோரை அவர்க்குப் பற்றுக்கோடாகிய சான்றோர்
முதலியவர் வெறுத்தொதுக்கலின் தனித்து நிற்றல் வேண்டிற்று.

     ஆன்று - கல்வி கேள்விகளாலே நிரம்பி என்க. குரவர்-நல்லாசிரியர்
முதலியவர். கோடலீயார்: ஒரு சொல். (வினைத் திரிச்சொல்) கொள்ளார்
என்னும் பொருட்டு.

     தான்றோன்றிய உயர்குடிப் பெரும்புகழ் என்பது தோன்ற
வான்றாங்கி நின்ற புகழ் என்றார்.                        (27)


28.            இதுவுமது

மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்
  பூவென் றெருக்கி னிணர்சூடுப புன்மை கொண்டே
பேயென் யெழுந்து பிறரார்ப்பவு நிற்பர் காம
நோய்நன் கெழுந்து நனிகாழ்க்கொள்வ தாயி னக்கால்.

     (இ - ள்.) காமநோய் நன்கு எழுந்து நனிகாழ் கொள்வது ஆயின்
அக்கால் - மாந்தருக்குக் காமப்பிணி நன்றாகத் தோன்றி மிகவும்
முதிர்வதனால் அப்பொழுது; மா என்று உரைத்து மடல் ஏறுப - குதிரை
என்று கூறிக்கொண்டு பனைமடலாலே குதிரையுருவஞ் செய்து நாணம்
விட்டுப் பலருங் காண அதன்மேல் ஏறா நிற்பர்; பூ என்று எருக்கின் இணர்
சூடுப - மணமாலை என்று கூறிக்கொண்டு எருக்கமலர்க் கொத்தினையும்
சூடிக்கொள்வர் : புன்மை கொண்டு-இவ்வாறு இழிதகவுடையன
செய்துகொண்டு; பிறர் பேய் என்று எழுந்து ஆர்ப்ப - தம்மைக் கண்ட
பிறரெல்லாம் இஃதொரு பேயென்று கூறி எழுந்து ஆரவாரிக்கும் படி; மன்று
தொறும் நிற்ப - அம்மடன்மாவை ஊர்ச்சிறாரா விழுப்பித்து மன்ற
மிருக்குமிடந்தோறும் அதனை யூர்ந்து சென்று ஊரவர் அறிய நிற்பர்;
இத்துணையும் செய்விக்கும் காமங்கண்டீர்! என்பதாம்,

     (வி - ம்.) ஒரு தலைவன் தான் காமுற்ற தலைவியை மணத்தற்கு
அவளுடைய சுற்றத்தார் முதலியோரால் இடையூறு நேர்ந்தவிடத்து இவ்வாறு
மடவேறுதல் பண்டைக்காலத்து நந்தமிழகத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாம்.
இந்நிகழ்ச்சி இழிதகவுடையதாகலின் காமத் தினிழிதனைமைக்கு இதனை
இவ்வாசிரியர் குறிக்கின்றார். காமங் காழ்கொண்டவர் இங்ஙனம்
மடன்மாவூரும் வழக்கமுண்மையை,