அகையெரி
யானாதென் னாருயி ரெஞ்சும்
வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ
முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர்
தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு;
அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற
நேரிழை யீத்தவிம் மா;
ஆங்கதை,
அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ
மொரீஇத் துறக்கத்தின் வழி யான்றோ
ருள்ளிடப்பட்ட வரசனைப் பெயர்த்தவ
ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென்
றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே”
எனவரும் கலித்தொகையானும் (139) நன்குணர்க.
இனி இச் செய்யுளோடு,
“மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே”
எனவருங் குறுந்தொகைச் செய்யுள் (17) ஒப்பு நோக்கற்பாலது. (28)
29. |
இதுவுமது
நக்கே விலாவிறுவர் நாணுவர் நாணும் வேண்டார் |
|
புக்கே கிடப்பர் கனவுந்நினை கையு மேற்பர்
துற்றூண் மறப்ப ரழுவர்நனி துஞ்ச லில்லார்
நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்ப மாக்கும். |
(இ
- ள்.) நக்கே
விலா இறுவர் - காமுகரின் இழிசெயலைக் கண்டு
கயமாக்கள் நகைத்து நகைத்துத் தம் விலாவென்பொடிந்து போவர்;
நாணுவர்-மற்றுச் சான்றோர் தாமும் அவர்பொருட்டு நாணாநிற்பர்; நாணும்
வேண்டார் - மற்று அக் காமுகரோ நாணத்தை ஒரு பொருளாகக்
கருதமாட்டார்; (கைவிட்டொழிவர்.) புக்கே கிடப்பர் - நாளெல்லாம் கற்பில்லா
அம்மகளிர் இல்லத்தே புகுந்து அவ்விடத்தேயே சோம்பித் துயின்று கிடப்பர்;
கனவும் நினைகையும் ஏற்பர் - அத்துயிலினூடும் மனவமைதியின்றிக் கனாக்
காண்டலையும் துயில் கலைந்துழி அம்மகளிரை நினை தலையுமே
தொழிலாகக் கொள்பவராவர்; துற்று ஊண் மறப்பர் - உண்ணும்
|