உணவினையும்
மறுந்தொழிவர்; அழுவர் - அவரால் கைவிடப்படின்
அழாநிற்பர்; நனி துஞ்சல் இல்லார் - நன்கு துயிலுதல்தானுமிலராவார்;
நற்றோள் மிகை பெரிது நாடு அறி துன்பம் ஆக்கும், இவ்வாறு
அம்மகளிருடைய அழகிய தோள்கள் காமுகருக்கு உலகத்தாரெல்லாம்
கண்கூடாகக் காணத் தகுந்த மாபெருந் துன்பத்தையுண்டாக்கும்; ஆதலால்
அம்மகளிர் கேண்மை கைவிடற்பாலது, என்பதாம்.
(வி
- ம்.) காமுகக் கயவருடைய இழிசெயலைக் கண்டுழித்
தம்பழிநோக்காக் கயமாக்கள் விலாவிறும்படி விழுந்து விழுந்து சிரிப்பர்; பிறர்
பழியும் தம்பழிபோற் கருதும் சான்றோரோ நாணமெய்துவர் இங்ஙனமாகவும்
காமுகரோ நாணுதலிலர் என்பார் நக்கே விலாவிறுவர் நாணுவர் நாணும்
வேண்டார் என்றார். இவற்றிற்குத் தம்பழி நோக்காக் கய மாக்கள் என்றும்,
சான்றோர் என்றும், காமுகர் என்றும் ஏற்றபெற்றி எழுவாய்கள் வருவித்
தோதுக.
பிறரை எள்ளி விலாவிறச் சிரிப்பர் என்பதனால். கயமாக்கள் என்பதும்
நாணுவர் என்றதனால், சான்றோர் என்பதும், நாணும் வேண்டார் என்பதனால்
காமுகர் என்பதும் பெற்றாம் கயமாக்கள் தாம் பழியுடையராய் வைத்தும்
பிறர்பழி கேட்டுழி நகைத்து நாடறியச் செய்யு மியல் புடைய ரென்பதனை,
“அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்” --குறள், 1079
என்பதனானும், சான்றோர் பிறர் பழியைத் தம் பழிபோற் கருதி
நாணுவர் என்பதனை.
“பிறர்பழியுத் தம்பழியும் நாணுவர் நாணுக்
குறைபதி யென்னு முலகு” --குறள், 1015
என்பதனாலும் உணர்க.
இனி, காமுகர் நாணும் வேண்டார் என்பதனை,
“ஒண்டொடீ, நாணிலன் மன்ற விவன்,
ஆயின் ஏஎ!
பல்லார் நக்கெள்ளப் படுமடன் யாவேறி
மல்லலூ ராங்கட் படமே” --கலி, 91
எனவரும் மடவேறுவார் செயலினும்,
“ஏஎ இஃதொத்தன் நாணிலன் தன்னொடு
மேவே மென்பாரையும் மேவினன் கைப்பற்றும்”
எனவரும் மிக்க காமத்து மிடலுடையார் ஒழுக்கத்தினும் (கவி, 92) காண்க.
|