பக்கம் எண் :

44

          “தந்தலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
           புன்னலம் பாரிப்பார் தோள்”
           --குறள், 916

எனவும்,

          “நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
           பேணிப் புணர்பவர் தோள்”
            --குறள், 917

எனவும் வருந் திருக்குறள்களான் உணர்க.

     அக நலமாகிய அன்புடைமையும் கற்புடைமையு மின்மை தோன்ற
“புரிவளை முன்கைப் புனையிழையார்” எனப் புறநலத்தையே விதந்தெடுத்
தோதினர். (30)


31.        கள்ளாமை

பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
  வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி யுலையக் குறைக்குமே.


     (இ - ள்.) களவில் - மறைவாக; பிறர் வீடு இல் பல்பொருள் -
பிறமாந்தர் கைவிடுதலில்லாத பல்வேறு பொருள்களையும்; பீடு இல்
செய்தியில்- பெருமையில்லாத கன்னமிடுதல் முதலிய தொழில்களாலே;
கொண்ட பயன் என - நீ களவுகொண்டதன் பயன் இஃதேயாம் என்று
சொல்லி; பற்றி - செங்கோன் மன்னவன் கள்வரைத் தன் மறவர்களால்
பிடிப்பித்து; ஓடல் இன்றி காலொடு கைகளைக் கூடி - தப்பி ஓடிவிடாதபடி
அவர்தம் கால்களையும் கைகளையும் கூட்டித் தளையிட்டு; உலையக்
குறைக்கும் - அவர் நெஞ்சம் பதறும்படி துணிப்பன், என்பதாம்.

     
(வி - ம்.) களவுசெய்யுங் குற்றத்திற்குக் கைகால்களைக் குறைத்துக்
கொல்லுதல் பழையகாலத்து மன்னர் வழக்கம். இதனைச் சிலப்பதிகாரத்தாலும்
உணர்க. இனி, வள்ளுவனார்,

         “கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
          தள்ளாது புத்தே ளுலகு” 
              --குறள், 29

என்றோதுந் திருக்குறளாலும் பண்டு கள்வரைக் கொல்லுதலே தக்க
வொறுப்பென அரசர் கருதிய துணரலாம். மேலும் இக்குறளானும் களவினால்
வரும் கேடுணர்க. “கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற்
கொற்றம்” என்பது பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று. (சிலப் - வழக்குரை
- 94 - 5.)