பக்கம் எண் :

45

இன்னும்,   

        “களவின்கட் கன்றிய காதல் விளைவிண்கண்                     வீயா விழுமந் தரும்”                  --குறள், 284

என்பதனானும் களவினால் வருந் தீமையை யுணர்க.           (31)

32.          பொய்யாமை

பொய்யி னீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்
  டைய மின்றி யறநெறி யாற்றுமின்
வைகல் வேதனை வந்துற லொன்றின்றிக்
கௌவை யில்லுல கெய்துதல் கண்டதே.

     (இ - ள்.) பொய்யில் நீங்குமின்-பொய் கூறுவதினின்றும் அகலுங்கள்;
பொய்யின்மை பூண்டு கொண்டு - பொய்யாமை என்னும் அணிகலனை
எப்பொழுதும் அணிந்துகொண்டு: வைகல் நெறி அறம் ஆற்றுமின் -
நாடோறும் நன்னெறியிலே நின்று நல்லறங்களை ஒல்லுந் துணையும் செய்யக்
கடவீர்; வேதனை ஒன்று வந்து கூறல் இன்றி - இவ்வாறு அறஞ்செய்து
வாழுபவர் தம் வாழ்நாளிற் றமக்கொரு துன்பமேனும் வருதலின்றி
இம்மையினும் இனிது வாழ்ந்து மறுமையினும்; கௌவை இல் உலகு
எய்துதல்-துன்பமில்லாத துறக்க நாட்டினை அடைதல் ஒருதலை என்னும்
உண்மை; கண்டது - திறவோர்தம் மெய்க் காட்சியாம்; என்பதாம்.  
   

     (வி - ம்.) பொய்யின் நீங்குமின் என்றொழியாது
அவ்வொழுக்கத்தைக் கடைப்பிடித் தொழுகுமின் என்பார் மீண்டும்
பொய்யின்மை பூண்டு கொண்டென்றார் பொய்யின்மை பூண்டு
கொண்டென்றமையான் அதனை அணிகலனாக உருவகித்தமை பெற்றாம்.
பொய்யின்மை எனினும் வாய்மை எனினும் ஒக்கும். பொய்யாமை அறங்களுட்
சிறந்ததென்பதனை,              

      “யாமெய்யாக் கண்டவற்று வில்லை யெனைத்தொன்றும்
       வாய்மையி னல்ல பிற”
                  --குறள், 300

எனவும்,         

      “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்         
       பொய்யா விளக்கே விளக்கு”
              --குறள், 299

எனவும்,   

      “பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பி
       செய்யாமை செய்யாமை நன்று”
            --குறள், 291

எனிவும்,

      “பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
       யெல்லா வறமுந் தரும்”  
                --குறள், 296

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களானு முணர்க.