(இ
- ள்.) வெள்ளம்
மறவி விறல்வேந்தர் தீ தாயம் கள்வர் என்று -
செல்வமானது வெள்ளமும் மறதியும் வெற்றியுடைய வேந்தரும் நெருப்பும்
தாயத்தாரும் கள்வரும் என்று கூறப்படுகின்ற; இ ஆறில் கைகரப்பத் தீர்ந்து
அகலும் - இந்த ஆறு வழிகளானும் உடையவனது கையினின்றும் மறைவாக
ஒழிந்து போகும் இயல்புடையதாம்; உள் இல்பொருளை ஒட்டாது. ஆதலால்
உள்ளீடற்ற பொய்யாகிய பொருளைப் பற்றாமல்; ஒழிந்தவர் - துறந்த
சான்றோர்; எள்ளும் பெருந்துயர் நோய் எவ்வம் - பிறர் இகழ்தற்குக்
காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை;
இகப்ப - நீங்கியுய்வர் என்பதாம்.
(வி
- ம்.) பொருள்
முயன்றீட்டிய விடத்தும் நம்மை விட்டகலுதற்குப்
பலவேறு வழிகளையும் உடைத்தாம் ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம்.
பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர்
ஆவர் என்பதாம்.
இனிச்
செல்வம் நிலையாத்தன்மை யுடைத்தென்பதனை
“அற்கா
வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்”
எனவரும் திருக்குறளானும்,
“முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய
பாலடிசின் மகளி ரேந்த
நல்ல கருனையா னாள்வாயும்
பொற்கலத்து நயந்துண் டார்கள்
அல்ல லடைய வடகிடுமி
னோட்டகத்தென் றயில்வால்க் கண்டும்
செல்வ நமரங்கா ணினையன்மின்
செய்தவமே நினைமின் கண்டீர்!”
எனவும்,
“அம்பொற்
கலத்து ளடுபா
லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின்
வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சை
யெனக் கூறி நிற்பாட் கண்டு
நம்பன்மின் செல்வ நமரங்காள்
நல்லறமே நினைமின் கண்டீர்!”
எனவும்,
வ.-4
|