“வண்ணத்
துகிலுடுப்பின் வாய்விட்
டழுவதுபோல் வருந்து மல்குல்
நண்ணாச் சிறுகூறை யாகமோர்
கைபாக முடுத்து நாளும்
அண்ணாந் தடகுரீஇ யந்தோ
வினையேயென் றழுவாட் கண்டும்
நண்ணன்மின் செல்வ நமரங்கள்
நல்லறமே நினைமின் கண்டீர் !”
(சீவக - 2623-4-5)
எனவரும்
விசயை கூற்றானும் உணர்க. பொருளல்லனவாகிய
பொய்ப்பொருள் என்பார் ‘உள்
இல் பொருள்’ என்றார். (35)
36. |
இதுவுமது
ஒழிந்த பிறவற னுண்டென்பா ருட்க |
|
வழிந்து பிறரவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானு மெய்தா தொழிந்தா ரழிந்து
பெருந்துயர்நோய்க் கல்லாப் பவரே. |
(இ
- ள்.) ஒழிந்த பிற அறன் உண்டு என்பார் -
பொருளையீட்டுதலிலேயே முயன்று இனி இப்பொருளால் யாம்
செய்யக்கடவனவாய் எஞ்சிய பிற அறச் செயல்களும் உண்டு அவற்றை
இனியேனும் செய்குவம் என்று கருதுகின்றவர்; உட்க - பெரிதும் அஞ்சும்படி ;
அழிந்து - அவரிடத்தினின்றும் அழிந்துபோய் ; பிறர ஆம்-பிறருடைய
கைப்பொருளாய் விடுகின்ற ; வம்பப் பொருளை - புதுமையையுடைய
செல்வத்தை ; இழந்து - போகூழானே இழப்பெய்தி ; சிறிதானும் எய்தாது
ஒழிந்தார் - அச்செல்வத்தின் பயனைச் சிறிதேனும் எய்தப் பெறாத மாந்தர்;
அழிந்து - நெஞ்சழிந்து; பெருந்துயர் நோய்க்கு - அவ்விழப்பாலுண்டான
பெரிய துன்பமாகிய வறுமை நோயால்; அல்லாப்பவர் - வாழ்நாள் முழுதும்
மனஞ்சுழன்று கிடப்பவரே ஆவர், என்பதாம்.
(வி
- ம்) பொருளீட்டுந் துணையும் நல்லோரும் அறஞ்செய்யார்
யாம்
இப்பொருளால் செய்ய வேண்டிய அறங்களும் உள. இனி அவற்றைச்
செய்வாம் என்று எண்ணியிருக்கும் போதே அவர் அஞ்சும்படி அப்பொருள்
அழிந்து பிறர் பொருளாய்விடும்; இத்தகைய நிலையாமையுடைய பொருளை
ஈட்டி அறஞ் சிறிதேனுஞ் செய்யாது அழிந்தொழிந்தவர் பின்னர் வாணாள்
முடியும் துனையும் மனம் வருந்திச் சுழன்று கிடப்பர் இத்தகையர் அளியர்
என்றிரங்கியபடியாம்.
ஆசிரி்யர்
திருவள்ளுவனாரும்.
|