(வி
- ம்.) ஈண்டல்
- ஓரிடத்தே குவிதல். நாட்டல் எனற்பாலது
எதுகை நோக்கி நாண்டல் என மெலிந்து நின்றது நாட்டல் -
நிலைநிறுத்துதல். நடுக்கம்-ஆகுபெயர், மருவு - பொருந்துதல். விறல் -
வெற்றி. பொறிகளை வெல்லுதலே வெற்றிகளிற் றலைசிறந்த வெற்றியாதலின்.
பொருள்களின்பாற் பற்றொழிந்து துறந்தார் விறலோ விழுமிது என்றார். (38)
39. |
இதுவுமது
இல்லெனின் வாழ்க்கையு மில்லையுண் டாய்விடிற் |
|
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லையுண் டாய்விடி னிம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வது மன்றே. |
(இ
- ள்.) இல்
எனின் வாழ்க்கையும் இல்லை - இவ்வுலகின் கண்
ஒருவனுக்குப் பொருள் இல்லையானால் அவனுக்கு நல்வாழ்க்கையும்
இல்லையாய்விடும்; உண்டு ஆய்விடின் - மற்றுப் பொருள்
உண்டாகுமானாலும்; கயவர் கொல்வர் - கள்வர் முதலிய கொடியவர்கள்
அதனைக் கைப்பற்றும் பொருட்டு அப்பொருளுடையானைக் கொன்று
விடுவர்; கொளப்பட்டும் வீடுவர் - கொல்லாமல் பொருளை மட்டும்
கவர்ந்துகொண்ட விடத்தும் பொருளுடையோர் ஏக்கத்தாற் றாமே உயிர்
நீப்பர்; இல்லை உண்டாய்மிடில் - அல்லதூஉம் ஒருவனுக்குப் பொருள்
இல்லாமையாகிய வறுமையுண்டாய் விட்டாலோ; இம்மை மறுமைக்கும் புல்
என்று காட்டும்-இம்மைறயினும் மறுமையினும் அவ்வறியவனுடைய வாழ்க்கை
பயனற்றதாய்ப் பொலிவழிந்து காணப்படும்; புணர்வதும் அன்றே -
அப்பொருள் தானும் ஒருவன் விரும்பியபொழுது அவன்பால் வந்து
சேர்வதுமில்லை; ஆகவே இத்தகைய பொருளின்பாற் பற்றுவையாது
துறந்துபோதலே சிறப்பாம் என்பதாம்.
(வி
- ம்.) பொருளில்லாமையானும்
துன்பம். உண்டாயவிடத்தும் சாதல்
முதலிய பெருந்துன்பமே யுண்டாம். அப்பொருளில்லாத வழி இம்மை மறுமை
வாழ்க்கைகள் புற்கென்றாகிவிடும். ஆதலால் அதன்கட் பற்றுவையாது துறந்த
போதலே நன்று. துறப்போர்க்கு வீட்டின்பம் உண்டாதல் ஒருதலை என்பதாம்.
பொருளில்லையாயின் வாழ்க்கையுமில்லை என்பதனை,
“அருளில்லார்க்
கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு” --குறள்,
247
எனவரும் திருக்குறளானுமுணர்க.
பொருளுடையார் கள்வர் முதலியோராற் கொலையுண்ணலும்
பொருளையிழந்துழித் தாமே ஏங்கி உயிர் விடுதலும் உலகியலிற் காண்க.
வறுமையுடையோர்
உணவிண்மை முதலியவற்றாற் றுன்புறுதலும்,
அறமுதலியன செய்யமாட்டாமையின் துறக்கம் புகமாட்டாமையும், பிறவும்,
|