பக்கம் எண் :

56

இதனோடு,

      “இளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
       உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
       செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்”

                                     --சிலப், 30 - 200

எனவரும் இளங்கோவடிகளார் செவியறிவுறூஉவும் நினைக.

இன்னும்,

      “வேற்றுவர் இல்லா நுமரூர்க்கே
          செல்லினும்-வெகுண்டீர் போல
       ஆற்றுணாக் கொள்ளா தடிபுறத்து
          வைப்பீரே யல்லி்ர் போலும்
       கூற்றங் கொண்டோடத் தமியே
          கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின்
       ஆற்றுணாக் கொள்வீர் அழகலா
          லறிவொன்று மிலிரே போலும்”    
    --சீவக, 1550

எனவருந் திருத்தக்க முனிவர் செய்யுளும் குறிக்கொள்க.       (41)


42.            துறவு

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
  லுற்றார்க் குடம்புமிகை யவையுள் வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிக
ளற்றா யுழலு மறுத்தற் கரிதே.

     (இ - ள்.) பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு - பிறப்பறுத்தலை
மேற்கொண்டார்க்கு; உடம்பும் மிகை - அதற்குக் கருவிமாகிய உடம்புதானும்
மிகையாம்; மற்றும் தொடர்ப்பாடு எவன் - அங்ஙனமானபின் மேலே
இயைபில்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்; அவை உள்வழி -
அவையிற்றின் தொடர்ப்பாடுளவாய விடத்து; பற்றா வினையாய் - மேலும்
மேலும் அவற்றின்பாற் பற்றுண்டாகி அப்பற்றுக் காரணமாக
வினைகளுமுண்டாகி; பலப்பல யோனிகள்-உயிர்தானும் அவ்வினைகள்
காரணமாக எண்ணிறந்த பிறவிகளிடத்தும்; அற்று ஆய்-முன்போலவே
பிறந்து; உழலும்-இன்ப துன்பங்களிற் கிடந்துழலா நிற்கும்; அறுத்தற்கு அரிது
- இவ்வாறு வளர்ந்துவிட்ட பற்றினை மீண்டும் அறுத்தற்கு மியலாது கண்டீர்!
என்பதாம்.

     (வி - ம்.) இச் செய்யுளில், “மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல்
பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை” (குறள், 345) என்னும் திருக்குறள்
முழுவதும் அமைந்திருத்தலுணர்க.