பக்கம் எண் :

58
44.         இதுவுமது

தானஞ் செய்திலந் தவமு மன்னதே
  கானந் தோய்நில விற்கழி வெய்தின
நானந் தோய்குழ னமக்குய்த லுண்டோ
மானந் தீர்ந்தவர் மாற்றம்பொய் யல்லவால்.

     (இ - ள்.) நானந் தோய்குழல் - புழுகளைந்த கூந்தலையுடைய நங்காய்!;
தானம் செய்திலம் - யாமோ கழிந்த நம் வாழ்நாளிலே ஈதல் முதலிய
நல்லறங்களைச் செய்திலேம்: தவமும் அன்னது - முதுமைப் பருவமெய்தியும்
தவவொழுக்கமும் மேற்கொண்டிலேம், மானம் தீர்ந்தவர் - மாண்பிறந்த
மானமுதலிய குற்றங்களினின்றும் விலகிய சான்றோர்; மாற்றம் பொய்யல்ல.
கூறிய அந்நல்லறங்கள் பொய்மையுடையன அல்லவே; கானம் தோய் நிலவில்
கழிவெய்தினம் - அந்தோ அரிது பெறு மிம் மக்கள் பிறப்பில் நமக்குற்ற
வாழ்நாள் எல்லாம் காட்டில் எறித்த நிலாப்போல வறிதே கழியப் பெற்றோம்;
நமக்கு உய்தல் உண்டோ - இனி நாக்கு உய்தியுண்டாகுமோ என்செய்கேம்!
என்பதாம்.

     (வி - ம்.) இது வாழ்நாளிற் பெரும்பகுதியைக் காமநுகர்ச்சியிலே
கழித்துக் காமஞ் சான்ற கடைக்கோட்காலைத் தன் வாழ்க்கைத் துனைவியை
நோக்கி ஒரு காமுகன் இரங்கிக் கூறியதென்க. இல்லிருந்து வாழ்ந்தேம்
ஆயினும் அறஞ் செய்திலேம். முதுமையும் வந்து பெரும்பகுதி கழிந்தது,
தவமும் செய்திலேம். இப்பொழுதோ இன்ப நுகரும் ஆற்றலும் இழந்தேம்.
சான்றோர் கூறிய நல்லறம் பொய்யல்ல. அங்ஙனமாகவும் அவற்றையும்
மதித்தொழுகினோமல்லேம் சாவு அணுகிவிட்டது; இனி யாம் என் செய்தும்.
நமக்கு எய்திய வாழ் நாள் காட்டில் பொழிந்தநிலா வொளிபோலப்
பயனற்றதாய் முடிந்தது என்று இரங்கியபடியாம்.

இவனுடைய இவ்விரங்கன் மொழிகளோடு,

       “நட்புநா ரற்றன நல்லாரு மஃகினார்
        அற்புத் தளையு மவிழ்ந்தன-உட்காணாய்
        வாழ்தலி னூதிய மென்னுண்டாம் வந்தததே
        ஆழ்கலத் தன்ன வொலி”
               (நாலடி, 12)

எனவரும் வெண்பாவையும் நினைக.

     நிலவிற்கு; உருபுமயக்கம். மானந்தீர் கொள்கையார் என்றும் பாடம்.

     இனி நல்லோர் கூறிய நல்லறங் கொள்ளாது வாழ்நாள் எல்லாம்
வீணாளாக்கி மடிந்து நரகிற் கிடந்துழல்வோர் கூற்றாக வருகின்ற