பக்கம் எண் :

59

   “பெண்டீர் மக்கள் கிளைஞ ரிவர் பின்னுக் குதவி யென்றெண்ணிக்
    கண்டீரறத்தை விட்டவராற் கடன்பட் டிறுத்தோ மென்பர்சிலர்
    உண்டீ ருடுத்தீர் சுற்றத்தீ ருற்ற வேளைக் கொருவரும் வந்
    தண்டீ ரந்தோ வும்மை நம்பி யான திதுவோ வென்பர் சிலர்”

எனவும்,

   “தேடிப் பொருளைச் சிறுதொழிற்கே
       செலுத்தி யுணர்ச்சி தெரியாமற்
    பாடிப் பதருக் கிறைத்ததெல்லாம்
       பலித்த தெமக்கிங் கென்பர்சிலர்
    கேடிப் படிவந் தெமைச்சூழக்
       கெடுத்த பாவி யுலகிலின்ன
    நாடிப் பிறக்க விடினுமங்ங
       னாடோ மென்று சிலர்சொல்வார்”

எனவும்,

   “என்று மிறவோ மென்றிருந்தோ
       மிறந்து படுவ தீதறிந்தா
    லன்று படைத்த பொருளையன்றே
       யருள்வோ மறையோர்க் கென்பர்சிலர்
    சென்று வரவாங் கெம்மையின்னஞ்
       செலுத்திற் புதைத்த திரவியத்தை
    யொன்று மொழியா தறம்புரிந்திங்
       கோடி வருவோ மென்பர்சிலர்”

எனவும்,

   “பிறந்த வுடனே துறந்துசுத்தப்
       பிரம முணர்ந்து பிறப்பதனை
    மறந்திந் நரகத் தெய்தாமை
       வருமோ நமக்கு மென்பர்சிலர்
    இறந்து நிரையத் தழுந்தியிட
       ரிவ்வா றுழப்பு தறியாமற்
    சிறந்த விவேகர் பெருமான்றன்
       செயலைத் தவிர்ந்தோ மென்பர்சிலர்”

எனவும் வருகின்ற கையறுநிலைச் செய்யுள்களும் நினைவிற்
கொள்ளத்பானைவாம்; (மெய்ஞ்ஞான விளக்கம் - 30-3-4-5,)    (44)