பக்கம் எண் :

62
47.       பொருண் மாண்பு

குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும்
  அலந்த கிளைக ளழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை யுண்டோ.

     (இ - ள்.) குலந்தரும் - பொருளானது மக்கட்கு உயர்ந்த
குடிப்பெருமையை யுண்டாக்கும்; கல்விகொணர்ந்து முடிக்கும் - கல்விச்
செல்வத்தைப் பிற விடங்களினின்று கொடுவந்து நிறைவுறச் செய்யும்; அலந்த
கிளைகள் அழிபசி தீர்க்கும் - வறுமையானலிந்த தம் சுற்றத்தாருடைய மிக்க
பசியைத் தீர்த்துய்யக் கொள்ளும்; ஆதலாலே, நிலம்பக வெம்பிய
நீள்சுரம்போகி - நிலம் பிளந்து போகும்படி வெப்பமுற்ற நெடிய பாலை
நிலத்தினைக் கடந்து சென்றேனும்; புலம்பு இல் பொருள் தர -
துயரின்மைக்குக் காரணமான பொருளை மாந்தர் ஈட்டிக் கொணரின்;
புன்கண்மை உண்டோ - பின்னர் அவர்பால் துன்பம் உண்டாகுமோ?
ஆகாது. ஆதலின் மாந்தர் அப்பொருளின் இத்தகைய சிறப்புக்களை
யுணர்ந்து அதனை நிரம்ப கட்டிக் கோடல் வேண்டும் என்பதாம்.


     (வி - ம்.) பொருள் மாந்தர்க்கு உயர்குடிப் பெருமையைத் தரும்;
அறிவுச் செல்வத்தையும் வரவழைத்துக் கொடுக்கும்; உற்றார் உறவினர்
பசிப்பிணியைப் போக்கி அவரை யுய்விக்கும், ஆதலால் மாந்தர் பாலை
நிலங்கடந்தும் திரைகடலோடியும் அப்பொருளை நிரம்ப ஈட்டுதல் வேண்டும்
என்றவாறு.

     பிறநாடுகளிற் சென்றும் பொருளீட்டல் வேண்டும் என்பார்
நிலம்பகவெம்பிய நீள் சுரம் போகிப் புலம்பில் பொருள்தரப்
புன்கண்மையுண்டோ என்றார். போகியும் எனல் வேண்டிய சிறப்பும்மை
தொக்கது. நீள்சுரம் போகி என்றமையால் திரைகடலோடியும் என்றும் கூறிக்
கொள்க. இப்பொருண் மாண்பிற்கு,

      “இம்மியன நுண்பொருள்க வீட்டிநிதி-யாக்கிக்
       கம்மியரு மூர்வர்களி றோடைதுதல் சூட்டி
       அம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென்
       றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே”

எனவும்,

      “உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே
       வெள்ளநிதி விழும்விளை யாததனி னில்லை
       தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லிமடி கிற்பின்
       எள்ளுநர்கட் கேக்கழுத்தம் போலவினி தன்றே”

எனவும்,