புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்”
(கலி - 11)
எனவருங் கலியானுமுணர்க.
இனி இன்பத்தினும் அறமே பெரிதென நத்தமிழகத்து இளைஞர்
பண்டைக்காலத்து உயிரன்ன தங்காதலிமாரையும் பிரிந்துபோய் நிலம்
பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பில் பொருள்தரும்
வழக்கமுடையராயிருந்தனர் என்பதனை,
“இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை யாராற் றறுசுனை முற்றி
யுடங்குநீர் வேட்ட வுடம்புயங் கியானை
கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு
வெறிநிரை வேறாகச் சாரச் சாரலோடி
நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ்
சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சு
நறுநுத னீத்துப் பொருள்வயிற் செல்வோ
யுரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய
வளமையா னாகும் பொருளிது வென்பாய்”
எனவரும் கலியானுமுணர்க; (12). (47)
48. |
நட்பு
கெட்டே மிதுவெந் நிலையென்று சார்தற்கண் |
|
நட்டவ
ரல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந் தாற்றவு
மெட்டவந் தோரிடத் தேகி நிற்பவே. |
(இ
- ள்.) கெட்டேம் இது எம் நிலை என்று
சார்தற்கண் - ஒருவர் தம்
கைப் பொருளிழந்துழி வறுமையுற்று யாம் பெரிதும் கெட்டொழிந்தேம்
இப்பொழுது எம்முடைய நிலைமை பெரிதும் இத்தகைய இன்னாமையுடைய
வறுமை நிலை கண்டீர் என்று சொல்லி ஏனையோர்பாற் செல்லுமிடத்தே;
நட்டவர் அல்லார் - வாய்மையாக நட்புச் செய்துள்ளவரையன்றி ஏனையராகிய;
நனி மிகு சுற்றம் - மிக மிக நெருங்கிய சுற்றத்தார் தாமும்; பெட்டது சொல்லி
- தாம் விரும்பிய குறிப்பு மொழி கூறி; ஆற்றவும் எட்ட வந்து-மிகவும்
தொலைவிலே சென்று; ஓரிடத்தே ஏகி-ஓரிடத்தே எம்முட கூடி; பெரிது
இகழ்ந்து நிற்ப - மிகவும் இகழ்ந்திருப்பர் தன்பதாம்.
|