பக்கம் எண் :

2

     மூன்றுலகம் என்பது மேலுலகும் நிலவுலகும் கீழுலகுமாம், இவற்றை
ஒளியுலகம் நிலவுலகம் இருள் உலகம் என்ப, உலகம் ஈண்டு உயி்ர்களின்
மேற்று, என்னை? ஏத்துதற்குரியன அவைகளேயாதலின் என்க,

     இருள் உலகத்தாரும் அருகனை, வணங்குவரே என்னின் வணங்குவர்.
என்னை? நரகவுலகமாகிய அதன்கண் வீழ்ந்துழல்வோர்க்கும்
அவனடிகளையன்றிக் களைகண் பிறிதில்லையாதலின், அங்கும்
நல்லறிவுபெற்று வணங்குவர் என்க,

     நரகத்துழலும் உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தந்தீவினைக் கிரங்கி
அறமுதலியவற்றைச் செய்ய அவாவுவர் அன்பதனை,-

     நரகத்தே கிடந்து நலிவோர் கூற்றாக வருகின்ற,

         
 “தேடிப் பொருளைச் சிறுதோழிற்கே
               செலுத்தி யுணர்ச்சி தெரியாமல்
           பாடிப் பதருக் கிறைத்ததெல்லாம்
               பலித்த தெமக்கீங் கென்பர்சிலர்
           கேடிப் படிவந் தெமைச்சூழக்
               கெடுத்த பாவி யுலகிலின்ன
           நாடிப் பிறக்க விடினுமங்ங
               னுடோ மென்று சிலர்சொல்வார்”


எனவும்,


          “என்று மிறவோ மென்றிருந்தோ
               மிறந்து படுவ தீதறிந்தால்
           அன்று படைத்த பொருளையன்றே
               யருள்வோ மறையோர்க் கென்பர்சிலர்
           சென்று வரவாங் கெம்மையின்னஞ்
               செலுத்திற் புதைத்த திரவியத்தை
           யொன்று மொழியா தறம்புரிந்திங்
               கோடி வருவோ மென்பர்சிலர்”


எனவும்,

          “பிறந்த வுடனே துறந்துசுத்தப்
               பிரம முணர்ந்து பிறப்பதனை
           மறந்திந் நரகத் தெய்தாமை
               வருமோ நமக்கு மென்பர்சிலர்
           பிறந்து நிரையத் தழுந்தியிட
               ரிவ்வா றுழப்ப தறியாமற்
           சிறந்த விவேகர் பெருமான்நற்
               செயலைத் தவிர்ந்தோ மென்பர்சிலர்”