பக்கம் எண் :

65

     (வி - ம்.) நட்டவரும் அல்லாரும் சுற்றமும் என எண்ணும்மை
கொடுத்து நட்டவரும் ஏதிலரும் சுற்றத்தாரும் என ஓதினும் ஆம். நட்டவர்
அல்லார் என ஓதி இச்செய்யுள் நட்பின் சிறப்பினைக் கூறுவதாகக் கொள்க.

இனி, இதனை,

       “இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
        எல்லாருஞ் செய்வர் சிறப்பு”
             --குறள், 752

என்னுந் திருக்குறளானும்,

       “உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போற்
        றொண்டா யிரவர் தொகுபவே--வண்டாய்த்
        திரிதருங் காலத்துத் தீதிலி ரோவென்
        றுரைதருவா ரிவ்வுலகத் தில்”
              நாலடி, 284

எனவரும் நாலடியானும்,

      “இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல்
       வன்சொல்லி னல்லது வாய்திறவா-என்சொலினுங்
       கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்
       பித்துடைய வல்ல பிற”  
          --நீதிநெறிவிளக்கம், 19

எனவரும் குமரகுருபரவடிகளார் மெய்ம்மொழியானும்,
      
      “கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயி
       னெல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானை
       இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
       செல்லா தவன்வாயிற் சொல்”


எனவரும் நல்வழியானும் உணர்க.                         (48)


49.            பேதைமை

தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
  எண்ணெய்கொண் டீட்டற் கிவறுதலென்னொக்கம்
பெண்மனம் பேதிக் தொருப்படுப்பெ னென்னு
மெண்ணி லொருவ னியல்பெண்ணு மாறே.

     (இ - ள்.) பெண் மனம் பேதித்து - பெண்ணினது மனத்தியல்பினை
மாற்றி; ஒருப்படுப்பென் என்னும் - ஒருமுகப்படுத்துவேன் என்று கூறுகின்ற;
எண் இல் ஒருவன் - ஆராய்ச்சியில்லாத மடவோனுடைய; இயல்பு எண்ணும்
ஆறு - தன்மையை நினையுங்கால்; என்னொக்கும் - அம்முயற்சி எதனை
ஒக்குமெனின்; தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க் கெட்ட - தெளிந்த
நீரிலே