பக்கம் எண் :

66

பெய்யப்பட்டு நான்கு திசைகளினும் பரவிச் சென்று அழிந்து போன;
எண்ணெய் கொண்டு ஈட்டுதற்கு இவறுதல்-எண்ணெயை மீண்டும் ஒருசேரக்
கொண்டுவந்து சேர்த்தற்கு அவாவுதலையே ஒக்கும் என்பதாம்.


     (வி - ம்.) பெண்ணின் மனம் இயல்பாகவே பன்முகப்பட்டுச்
செல்வதாம், அதனை ஒருமுகப்படுத்த முயலுதல் நீரிற் பெய்யப்பட்டுத்
திரையெலாம் சிதறிப்போன எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கூட்டிக்
கைக்கோடற்கு விரும்புவது போன்றதொரு பேதைமைத்து என்றவாறு.

     பெண்ணின் மனம் ஒருமுகப்படாதது என்னுமிதனை,

       “ஏந்தெழின் மிக்கா னிளையா விசைவல்லான்
        காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த
        நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
        கயலார்மே லாகு மனம்”
        --நீதிநெறி, விளக்கம், 82

என்பதனானும்.

      “அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைத்த காத
       லின்பஞ் செய்காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
       நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
       பின்செலும் பிறர்கணுள்ளம் பிணையனார்க் கடிய தன்றே”

எனவும்,

     “பெண்ணெனப் படுவகேண்மோ பீடில
          பிறப்பு நோக்கா
      உண்ணிறை யுடைய வல்ல வொராயிர
          மனத்த வாகும்
      எண்ணிப்பத் தங்கையிட்டா லிந்திரன்
          மகளு மாங்கே
      வெண்ணெய்க்குன் றெரியுற்றாற் போன்
          மெலிந்துபின் னிற்குமன்றே”

எனவும் வரும் சிந்தாமணியானும் (1596 - 7.)

     “மாரியுந் திருவு மகளிர் மனமுந்
      தக்குழி நில்லாது பட்டுழிப் படும்”

                           --பெருங்கதை, 1 - 35: 156 - 7

எனவரும் பெருங்கதையானுமுணர்க. இன்னும்,

     “இளம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
      மனம்போல மாறு படும்”
                --குறள், 822