பக்கம் எண் :

67

எனத் திருவள்ளுவனாரும் ஓதுதலும் இத்திருக்குறள் உரையின்கண் ஆசிரியர்
பரிமேலழகரும், “அவர் மனம் வேறுபடுதல்
பெண்மனம் பேதின்
றொருப்படுப்பெ னென்னும் எண்ணிலொருவன்’
என்பதனானும் உணர்க”
என இவ்வளையாபதிச் செய்யுளையே மேற்கோளாக எடுத்துக் காட்டுதலும்
காண்க.                                                  (49)


50.

        பொது மகளிரியல்பு

நீண்முகை கையாற் கிழித்தது மோக்குறு

  மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலு மன்பும் பிறந்துழிப் பேதுசெய்
தாணைப் பெண்ணைய வனைக்குறு மாறே.

     (இ - ள்.) நீள் முகை - தலைவனே! நீண்ட சிற்றரும்பினைக் கொய்து;
கையால் கிழித்து-அஃது அலராமையாலே தன் கையாலதனைக் கிழித்து; அது
மோக்குறும் - அதன்கண் மணமில்லாதிருக்கவும் அதனை மணமுடைய
மலர்போல மோக்கின்ற; மாண்வினைப் பாவை மறை - மாண்புடைய
வினைத்திறமமைந்த பாவை போல்வாளாகிய இவள் செய்கையின் கருத்து
யாதென; நின்று கேட்குறின் - அவள் செயலைக் கண்டு நின்று நீ எம்மை
வினவுதியாயின் கூறுதும்; பெண் - (அச்செயல்) பெண்ணானவள்; பேணலும் -
தகுதியில்லாதாரை விரும்புதலும்; அன்பும் - அவர் விரும்பாதவழியும் அவரை
அவாவுதலும்; பிறந்துழி - இவ்வாறு பேணலும் அவாவும் தம்பாற்
றோன்றியவழி; ஆணை - அவ்வாடவனை; பேது செய்து - மனமாற்றஞ்
செய்து; அணைக்குறும் ஆறு - அவனைத் தழுவிக்கொள்ளும் செயற்கு
இஃதறிகுறியாம் என்பதாம்.

     (வி - ம்.) இஃது அரும்பினைக் கொய்து மோக்குமொரு மகளைக்
கண்ட தலைவன் அச் செயலின் குறிப்பு யாது எனப் பாங்கனை வினவியவழி
வினவப்பட்டான் தற்குறிப்பேற்றமாக அச் செயலின் குறிப்புக் கூறியபடியாம்.
இனி வளையாபதி என்னுங் காப்பியத்தின்கண் இங்ஙனம் ஒரு நிகழ்ச்சி உளது
போலும் என்றூகித்தலும் மிகையன்று. சிற்றரும்பு மணமில்லாததாகவும்
நுகர்தற்குத் தகுதியில்லாததாகவும் இருக்க அம்மகள் அதனைக் கிள்ளிக்
கிழித்து மோக்குமிது அம்மகளிர் தகுதியில்லாதவரையும் தம்மை
விரும்பாதவரையும் காமுற்று அவரைத் தழுவுதற்கு ஏற்ற உபாயங்களைச்
செய்து வலிந்து தழுவுவதனைக் குறிக்கின்றது எனத் தீய மகளிரின்
இயல்பினைக் கூறியபடியாம்.

     தீய மகளிர் இயல்பிங்ஙனமாதலைச் சூர்ப்பநகை முதலியோர்பால்
காண்க. (50)


51.          இதுவுமது

யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப்
  பாறொடு பத்தினி மாபோ லொழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை
வேறோ ரிடத்து வெளிப்பட னன்றாம்.