(இ
- ள்.) முதிர்ந்தாள்
கூத்தி - அகவை முதிர்ந்தவளாகிய கணிகை
யொருத்தி; மகட்கு - தன் மகளாகிய இளங்கணிகைக்குச் செவியறிவுறுப்பவள்;
ஏடி! யாறொடி யாழ் ஞெலிகோல் நிலவு ஆர் கொடி - யாறு போலவும் யாழ்
போலவும் தீக்கடைகோல் போலவும் மலர் நிரம்பிய பூங்கொடி போலவும்;
பாறொடு பத்தினி மா போல - மரக்கலம் போலவும் கற்வுடை மகளிர்
போலவும் விலங்குகள் போலவும்; ஒழுகு என்று - நின்பால் வருகின்ற
காமுகரிடத்திலே நீ ஒழுகுவாயாக என்று; கூறினள் - அறிவுறுத்தினள்; இவை
- இவ்வுவமைகளின் பொதுத்தன்மை; நன்று வேறு ஓரிடத்து வெளிப்படல்
ஆம் - நன்றாக வேறோரிடத்து (விரிவகையாற் கூறுதும்) ஆங்கு
விளக்கமாகும் என்பதாம்.
(வி
- ம்.) ஒரு
கிழக்கணிகை தன் மகட்கு அறிவுரை கூறுபவள் ஏடி!
நீ நின்னை விரும்பி வரகின்ற காமுகரிடத்தே யாறுபோலவும் யாழ் போலவும்
தீக்கடைகோல் போலவும் நிலவு போலவும் மரக்கலம் போலவும் கற்புடை
மகளிர் போலவும் விலங்குகள் போலவும் நடந்து கொள்வாயாக என்று
கூறினள்; அவ்வுவமைகளின் பொதுத்தன்மையை யாம் வேறிடத்தில கூறுவேம்;
அங்கு அவை நன்கு விளக்கமாகும் என்றவாறு மேலே அவ்வுவமைகளை
விரித்து விளம்புவர்.
ஞெலிகோல்
- தீக்கடைகோல். பாறு - மரக்கலம். பாறு என்னும் சொல்
மரக்கலம் என்னும் பொருளுமுடைத்தென்பது இவ்வாசிரியர் இதற்கு
அப்பொருளே பிற் கூறுதலாற்பெற்றாம். (51)
52. |
பின்னும்
இரண்டுவமைகள்
ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கவென்று |
|
பாயிர
மின்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் றோள்நம்பி
யாவ ரடைந்தவர்க் கவையும் புரைப. |
(இ
- ள்.) நின்தோள்
நம்பி - என் மகளே! நின்னுடைய தோள்களைப்
பெரிதும் விரும்பி; மேவு அரும் வான்பொருள் தந்து - பெறுதற்கரிய சிறந்த
பொருள்களையும் வழங்கி; யாவர் - எந்தக் காமுகர்; அடைந்தவர்க்கு -
நின்னை எய்தியவர் அவர்கட்கெல்லாம் நீ ஒழுகுவதற்கு; ஆய் குரங்கு -
மரங்களிலேறி இரையை ஆராய்கின்ற குரங்கும்; அம் சிறை வண்டு இனம்
அவையும் புரைப-அழகிய சிறகுகளையுடைய அளிக்கூட்டமுமாகிய
இவைகளும் உவமையாவனவேயாம்; போல்க - ஆதலால் அவற்றைப்
போலவும் ஒழுகக் கடவாய்; என்று பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள் -
என்று இவற்றைப் பற்றிய முன்னுரை யாதுங் கூறாமலே மிகவும்
கூறுவாளாயினள் என்பதாம். (வி - ம்.) அத் தாயாகிய கூத்தி முற்கூறிய யாறு
முதலியனவே யன்றிக் குரங்கும் வண்டினமும்கூட நின்னொழுக்கத்திற்கு
ஒப்பன ஆதலின் அவற்றைப் போலவும் ஒழுகு என்றாள் என்றவாறு.
|