இவ்வாறு
உவமை மாத்திரமே குறிப்பாகக் கூறினள் பிறிதொன்றுங்
கூறிற்றிலள் என்பார் பாயிரமின்றிப் பயிற்றி மொழிந்தனள் என்றார்.
இவற்றிற்கு இனி யாம் விளக்கங் கூறுதும் கேண்மின்! என்பது கருத்து.
இனி,
நின்னை நயப்பார் பலருளராயினும் நீயோ பொருள் மிகுதியாக
நினக்கு வழங்குவோரை மட்டுமே ஏற்றுக்கொள்க என்று குறிப்பாற் கூறுவாள்
“மேவரும் வான்பொருள் தந்து நின் தோள் நம்பியாவர் அடைந்தவர்க்கு”
என்று விதந்தோதினள்.
நம்பி-விரும்பி.
என்னை? “நம்புமேவும் நசையா கும்மே” (தொல் -
உரி. 31.) என்பதனானும் அதற்கு அப்பொருளுண்மையறிக. தோள்:
இடக்கரடக்கு (52)
கூத்தி
கூறிய உவமைகட்கு விளக்கங் கூறல்
53.
|
1. ஆறு
வாரி பெருகப் பெருகிய காதலை |
|
வாரி
சுருங்கச் சுருக்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி யறவறும் வார்புன லாற்றின்
வகையும் புரைப. |
(இ
- ள்.) வாரி பெருகப் பெருகிய காதலை - இனி,
கணிகையர்
தம்மை விரும்பி வருகின்ற காமுகர் வழங்கும் பொருள் வரவு
பெருகுந்துணையும் பெருகிய தம் காதலை; வாரி சுருங்கச் சுருக்கி
விடுதலின் - அப்பொருள் வரவு குறையுமளவு குறைத்துப் பின் பொருள்
வரவு நின்றவுடன் தங்காதலையும் துவர நீத்துவிடுதலாலே; மாரி பெருகப்
பெருகி - மழைநீர் வரவு பெருகுந்துணையும் பெருகி; அற அறும் -
அம்மழை நீர்வரவு அறவே அற்று வறந்து விடுகின்ற; வார்புனல் ஆற்றின்
வகையும் புரைப-நெடிய நீர்ஒழுகும் யாற்றினது தன்மையையும் நிகர்ப்பர்
என்பதாம்.
(வி
- ம்.) அம்முது கூத்தி யாறுபோல ஒழுகுக
என்றதன் கருத்து,
யாறானது மழைநீர் வந்து புகுமளவும் பெருகி அது வறத்தலும் வறந்து
போவதுபோல நீயும் நின்னை விரும்பும் காமுகர் நினக்குப் பொருள்
மிகுதியாக வழங்குந்துணையும் மிகவும் காதலுடையாள் போன்று ஒழுகுக;
அவர் பொருள் வழக்கம் குறையின் நீ நின் காதலையும் குறைத்துக்
கொள்ளக் கடவை. பொருள் கொடாவிடின் நீயும் காதலியாது முகமாறி
யொழுக்கடவை என்பதாம் என்றவாறு. (53)
54. |
2.
யாழ்
எங்ஙன மாகிய திப்பொரு ளப்பொருட் |
|
கங்ஙன
மாகிய வன்பின ராதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற் கங்ஙன மாகிய
யாழும் புரைப. |
|