தீ
வெளிப்படவே அத்துரும்பு அழிந் தொழியுமென்க. எனவே கணிகை
மகளிர் தம்மை விரும்பும் காமுகர் வழிநின்று அவர்க்கிதஞ் செய்வார்
போன்று செயல்கள் பலவற்றையுஞ் செய்து அவர் கொண்டுள்ள
பொருளனைத்தும் கைக்கொண்டுவிடுவர்; பொருளிழப்பாலே அக்காமுகர்
அழிந்துபடுவர்; ஆதலால் கணிகையர் தீக்கடைகோலையே நிகர்ப்பர்
என்றவாறு.
அரணம் எனும்
இலர் என்றது - பாதுகாவல் சிறிதும் ஆதல் இலராய்
என்றவாறு. அரணம் - பாதுகாவல் எனும் - சிறிதும். திண்பொருள் கோடற்கு
என்பதனைப் பின்னுங் கூட்டுக.
கணிக் கையர்
காமுகர்க்குப் பெரிதும் அரணமாவார் போன்றொழுகினும்
அங்ஙனம் அரணம் ஆதல் இலர். அவர் அழிவிற்கே காரணம் ஆவர்
என்பதாம் தீக்கடைகோலும் கடையுங்கால் அதற்கு அரணமாவது
போற்றோன்றி அழிவிற்கே காரணமாதலுணர்க. (55)
56. |
4.
திங்கள்
நாடொறு நாடொறு நந்திய காதலை |
|
நாடொறு
நாடொறு நய்ய ஒழுகலின்
நாடொறு நாடொறு நந்தி யுயர்வெய்தி நாடொறுந் தேயு
நகைமதி யொப்ப. |
(இ
- ள்) நாள் தொறும் நாள் தொறும் நந்திய
காதலை-இனிக் கணிகை
மகளிர் தாம் தம்மை விரும்பிய காமுகர் பொருளியுந்துணையும் நாளுக்கு நாள்
வளர்ந்து வருகின்ற காதலுடையார் போற் காட்டி; நாள்தொறும் நாள்தொறும்
நய்ய ஒழுகலின் - பின்னர் அக்காமுகர் பொருளீதல் அருகி வருங்காலத்தே
நாளுக்கு நாள் அருகிவருகின்ற காதலருடையராய் அக்காமுகர் வருந்தும்படி
ஒழுகுதலாலே; நாள்தொறு நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி - முதற்
பகுதியிலே நாளுக்குநாள் வளர்ச்சிபெற் றுயர்வினை யடைந்தும்; நாள்தொறும்
தேயும் - இறுதிப் பகுதியிலே நாளுக்கு நாள் ஒளிமழுங்கித் தேய்தலுடைய;
நகைமதி ஒப்பர் - ஒளியுடைய திங்கள் மண்டிலத்தையும் ஒப்பர் என்பதாம்.
(வி
- ம்.) கணிகையர் தம்மை விரும்பும் காமுகர்
பொருளீயுந்துணையும் நாளுக்கு நாள் காதல் மிகுவார் போன்று காட்டி அவர்
பொருளீதல் குறையுங் காலத்தே அன்பினையும் நாளுக்கு நாள் குறைத்துக்
கோடலாலே ஒளிப்பக்கத்தே நாளுக்கு நாள் வளர்ந்து இருட்பக்கத்தே
நாளுக்கு நாள் தேய்ந்தொழியும் திங்கள் மண்டிலத்தையும் ஒப்பர் என்றவாறு (57)
57. |
5.
பூங்கொடி
வனப்பில ராயினும் வன்மையி லோரை |
|
நினைத்தவர்
மேவர நிற்பமைக் கவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனின மார்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப. |
|