(இ
- ள்.) அவர் தாம் - இன்னும் அக்கணிகையர்
தாம்; வனப்பு
இலராயினும் - அழகில்லாதவராயினும்; வன்மையிலோரை நினைத்து -
பொருளுடையவரும் அறிவுவன்மை யிலாதவருமாகிய காமுகக் கய்வர்கள்
தம்மை விரும்பி வரவேண்டும் என்று கருதி, அவர் மேவர நிற்பமைக்கு -
அக்காமுகர் தம்மைப் பெரிதும் விரும்பித் தம்பால் வரும்படி தம்மை
ஒப்பனைசெய்து கொண்டு அவர் காணும்படி நிற்றலாலே; புனத்திடை -
காட்டினூடே; வண்டொடு தேன் இனம் - ஆண்வண்டும் பெடைவண்டுமாகிய
அளிக்கூட்டம்; உடன் கனைத்து - ஒருசேர இசை முரன்று; ஆர்ப்ப -
தம்பால் தாமே வந்து ஆரவாரித்து மொய்க்கும்படி; பூத்த - அழகாக
மலர்ந்து நிற்கும்; பூங்கொடி ஒப்ப - மலர்க்கொடியையும் நிகர்ப்பர் என்பதாம்.
(வி
- ம்.) வன்மையிலோர் - நெஞ்சின் திண்மையிலாத நொய்யர்.
அவர் - அக்காமுகர். நினைத்து என்றது -தம்மை விரும்பித் தம்பால் வருதல்
வேண்டும் என்று கருதி என்றவாறு. நிற்பமைக்கு - நிற்றற்கு. கனைத்து -
இசைமுரன்று. வண்டு - ஆண் வண்டு. தேன் - பெடைவண்டு என்க.
கணிகை மகளிர் பொருண்மிக்க காமுகக் கயவர் தம்மைக் கண்டு
காமுற்றுத் தம்பால் வரும்படி தம்மை மிகவும் ஒப்பனை செய்துகொண்டு
அவர் தம்மைக் காணும்படி உலாவி நிற்றலாலே, வண்டுகள் தம்மை விரும்பி
வருதற்பொருட்டுக் காட்டின்கண் அழகாக மலர்ந்து அவ்வண்டுகள்.
காணும்படி அசைந்து நிற்கும் பூங்கொடிகளையும் ஒப்பாவர் என்றவாறு. (57)
58.
|
6.
மரக்கலம்
தங்கட் பிறந்த கழியன்பி னார்களை |
|
வன்கண்மை
செய்து வலிய விடுதலின்
இன்பொரு ளேற்றி யெழநின்ற வாணிகர்க் கங்கண்
பரப்பகத் தாழ்கல மொப்ப. |
(இ
- ள்.) தம்கண் பிறந்த கழி அன்பினார்களை
- இன்னும் கணிகை
மகளிர் தம்மிடத்து முதிர்ந்த காமமுடையராகிய ஆடவரை;
வண்கண்மைசெய்து - அவர் தமக்கீயுமாற்றால் வறியராய பின்னர்ச் சிறிதும்
கண்ணோட்டமில்லாத இகழ்ச்சிகளைச் செய்து; வலிய விடுதலின் - வலிந்து
பொக்கிவிடுதலாலே; இன்பொருள் ஏற்றி-இனிய பல்வேறு பண்டங்களையும்
தம்முள் ஏற்றிக்கொண்டு; எழநின்ற வாணிகர்க்கு - தம்மையே புகலாகக்
கருதிக் கடலிலே தம்மைச் செலுத்தி வருகின்ற வணிகமாக்கள்பால் சிறிதும்
இரக்கமின்றி அவரிறந்தொழியும்படி; அங்கண் பரப்பகத்து - அழகிய
இடத்தாற் பெரிதும் பரந்துகிடக்கும் அக்கடலின் நடுவே; ஆழ்கலம் ஒப்ப -
அவர் பொருளையெல்லாம் தன்னோடு கொண்டு நீருள் மூழ்கி விடுகின்ற
மரக்கலத்தையும் ஒப்பர் என்பதாம்.
|