பக்கம் எண் :

73

     (வி - ம்.) தம் என்றது - கணிகையரை. கழியன்பு என்றது ஈண்டு
மிக்க காமம் என்றவாறு. வன்கண்மை - கண்ணோட்ட மின்மை.

     கணிகை மகளிர் தம்மை விரும்பிவரும் காமுகக் கயவரின்
பொருளெல்லாம் தம்பாலகப்படுத்திக்கொண்டு பின்னர் அவரழிந்தொழியும்படி
கண்ணோட்டமின்றித் தள்ளிவிடுதலாலே, வணிகரீட்டிய பொருளையெல்லாம்
அகப்படுத்திக்கொண்டு அவரைக் கண்ணோட்டமின்றி அகற்றி விட்டு
அப்பொருளோடு கடலினூடு ஆழ்ந்துவிடுகின்ற மரக்கலத்தையும் ஒப்பர்
என்றவாறு.                                                   (58)


59.

      7. கற்புடைமகளிர்

ஒத்த பொருளா னுறுதிசெய் வார்களை
  எத்திறத் தானும் வழிபட் டொழுகலின்
பைத்தர வல்குல் பொற் பாவையினல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.

     (இ - ள்.) பைத்துஅரவு அல்குல் பொன் பாவையின் நல்லவர் -
நச்சுப் பையினையுடைய பாம்பினது படம்போன்ற அல்குலையுடைய
பொன்னாலியன்ற பாவை போலும் அழகையுடைய கணிகை மகளிர்; ஒத்த
பொருளால் உறுதி செய்வார்களை - தம் தகுதிக்கேற்ற பொருள் கொடுத்துத்
தமது வாழ்க்கையினை நிலை பெறுத்துகின்ற ஆடவர்களை; எத்திறத்தானும்
- எல்லா வழிகளானும்; வழிபட்டு ஒழுகலின்-வழிபட்டு நடத்தலாலே;
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப - கற்புடை மகளிர் தன்மையையும்
ஒப்பர் என்பதாம்.

     (வி - ம்.) கணிகை மகளிர் - தாம் விரும்புகின்ற பொருளைத் தமது
தகுதிக்கேற்ப வழங்குகின்ற ஆடவர்களை எவ்வாற்றானும் வழிபாடு செய்து
பேணி யொழுகுதலாலே அவர்கள் கற்புடை மகளிரையும் ஒப்பர் என்றவாறு.                                                       (59)


60.        8. விலங்கு

வீபொரு ளானை யகன்று பிறனுமோர்
  மாபொரு யான்பக்க மாண நயத்தலின்
மெய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலரன்ன கண்ணார்.

     (இ - ள்.) மலர் அன்ன கண்ணார் - தாமரை மலர்போன்ற அழகிய
கண்ணையுடைய கணிகை மகளிர்; வீ பொருளானை அகன்று-தம்மை நயந்து
தமக்கு வழங்கி அழிந்துபோன பொருளையுடைய ஆடவனைக்
கைவிட்டுப்போய்; ஓர் பிறன்மா பொருளான் பக்கம் - மற்றோர் ஏதிலனாகிய
பெரிய செல்வன்பால் சென்று; மரண நயத்தலின் - மாட்சிமை யுண்டாக
விரும்புதலாலே; மேய்புலம் புல்அற - தாம் தொன்று தொட்டு மேய்கின்ற
நிலம் புல் அற்று வறிதாய விடத்தே; மற்று ஓர் புலம்புகு மாவும்-வேறோர்