பக்கம் எண் :

74

புன்னிரம்பிய நிலத்தைத் தேடிச் செல்லும் விலங்குகளையும்; புரைப - ஒப்பர்
என்பதாம்.

     (வி - ம்.) வீ பொருளான்-அழிந்த பொருளையுடையோன் -
வறுமையுற்றவன்.

     கணிகை மகளிர் பொருள் அழிந்தவனைக் கைவிட்டுப் புதுவதாக
வேறொரு பொருளுடையான்பாற் புகுதலாலே, தாம் மேய்கின்ற நிலம் புல்லற்று
வறிதாயவுடன் மற்றுமொரு புல் நிரம்பிய நிலத்திற் புகுகின்ற விலங்குகளையும்
ஒப்பரென்றவாறு.                                                      (60)


61.         9. குரங்கு

நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
  நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்பிள மென்முலை வாணெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.

     (இ - ள்.) வம்பு இளமெல்முலை வாள் நெடு கண்ணவர் - கச்சணிந்த
இளமையும் மென்மையுமுடைய முலையினையும் வாள் போன்ற நெடிய
கண்களையும் உடைய கணிகை மகளிர்; நுண் பொருளானை
நுகர்ந்திட்டு-தேய்ந்தழிகின்ற பொருளையுடையவனை அவன் செல்வந்
தேயுந்துணையும் அவனோடு கூடி இன்புற்றிருந்து அப் பொருள் அழிந்த
பின்னர்; நன்கு வான் பொருள் உடையானை - நன்கு சிறந்த
பொருளுடையானாகிய மற்றொருவனை விரும்பிப் போதலாலே; கொம்பிடை
வாழுங் குரங்கும் புரைப - மரக் கொம்புகளிலே வாழ்ந்து அவற்றுள்
ஒன்றன்கண்ணுள்ள மலர் காய் கனி முதலியவற்றைத் தின்று தீர்த்தபின்
மற்றொரு கிளையிற் றாவிச்செல்லுகின்ற குரங்கையும் ஒப்பர் என்பதாம்.

     (வி - ம்.) நுண்பொருள் தேய்ந்து நுண்ணியதாகிய பொருளை -
அஃதாவது அழிந்து குறைவுற்ற சிறுபொருள்.

     கணிகையர் ஒருவன்பாலுள்ள பொருளைக் கவர்ந்த பின்னர் அவன்
வறியனாக மற்றொரு பொருளுடையானைச் சேர்வதனால் ஒரு கொம்பிலுள்ள
இரை தீர்ந்த பின்னர் மற்றோரு கிளைக்குத் தாவுகின்ற குரங்கையும் ஒப்பர்
என்றவாறு.                                               (61)


62.          10. வண்டு

முருக்கலர் போற்சிவந் தொள்ளிய ரேனும்
  பருக்கா டில்லவர் பக்க நினையார்
அருப்பிள மென்முலை யஞ்சொ லவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.

     (இ - ள்.) அரும்பு இளமெல் முலைஅம் சொல் அவர் தாம் - 
கோங்கரும்பு போன்ற இளமையுடைய மெல்லிய முலையினையும்,