அழகிய
சொற்களையுமுடைய அக் கணிகை மகளிர் தாம்; முருக்கு
அலர்போல் சிவந்து ஒள்ளியர் ஏனும் - முண்முருக்கமலர் போன்று சிவந்து
ஒளியுடைய உடம்பினையுடையரேனும்; பருக்காடு இல்லவர் பக்கம்
நினையார்-பொருட் பெருக்கம் இல்லாத வறியவர் பக்கலிலே கருத்து
வைத்தலிலர் ஆகலின், வரிச்சிறை வண்டின் வகையும் புரைப - வரிகளமைந்த
சிறகினையுடைய வண்டினங்களையும் ஒப்பாவர்; என்பதாம்.
(வி
- ம்.) முருக்கு
- முண்முருங்கை. ஒள்ளியர் - ஒளியுடையர்.
முருக்கலர் - மேனிக்கு நிறவுவமை. பருக்காடு - பருத்தல், பெருக்கம்.
பருக்காடு என்பதன்கண் காடு. தொழிற்பெயர் விருதி. சாக்காடு,
என்பதன்கண் அவ்விகுதி வந்தமை காண்க.
கணிகை
மகளிர் பொருளில்லாரை அவர்தாம் பேரழகுடையரேனும்
கருதியும் பாரார் ஆதலால், பூவாத கொடிகளை நோக்காத வண்டுகளையும்
ஒப்பாவர் என்றவாறு.
இனி,
கணிகை மகளிரைப் பற்றி வருகின்ற யாறொடு என்னும் (51)
செய்யுள் முதலாக முருக்கலர் என்னும் (62) இச் செய்யுள் ஈறாகவுள்ள
செய்யுள்களோடு.
“ஈற்று
மந்தி யிற்றெழு பூங்கொடி
புற்புல முதிரக நற்றுற விக்கே
போல்வ ரென்னும் சால்வுடை யொழுக்கிற்
களைதுறை போகிய கணிகா சாரத்துப்
பலதுறை பயின்று பல்லுரைக் கேள்வியொடு
படிவங் குறிக்கும் பாவனை மேற்கொண்
டடிமையிற் பொலிந்த வகன்பரி யாளத்துத்
தலைக்கோற் சிறப்பி னலத்தகு மகளிர்.”
--பெருங்கதை, 5-8:50-8
எனவும்,
“அரசர்க் காயினும் அடியவர்க் காயினும்
அன்றை வைகல் சென்றோர்ப் பேணி
பள்ளி மருங்கிற் படிறின் றொழுகும்
செல்வ மகளிர் சேரி.” --பெருங்கதை, 1-35:88-9
எனவும்
வரும் பெருங்கதைப் பகுதிகளும்,
“ஆடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலு மழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவி லருப்புக்கணை தூவச்
செருக்கய னெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
|