பக்கம் எண் :

76

       பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
        வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிர்”
  --மணிமே, 18-103-9

எனவும்,

      “காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
       போதல் செய்யா உயிரொடு புலந்து
       நளியிரும் பொய்கை யாடுநர் போல
       முளியேரிப் புகூஉ முதுகுடிப் பிறந்த
       பத்தினிப் பெண்டி ரல்லேம் பலர்தங்
       கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே
       பாண்மகன் பட்டுழிப் படுஉம் பான்மையில்
       யாழினம் போலும் மியல்பின மன்றியு
       நறுந்தா துண்டு நயனில் காலை
       வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்
       வினையொழி காலைத் திருவின் செல்வி
       யனையே மாகி யாடவர்த் துறப்பேம்”  
         --18-11-20

எனவும் வரும், மணிமேகலைப் பகுதிகளும்,

      “பருகு வாரிற் புல்லிப் பயங்கண் மாறத் துறக்கு
       முருகு விம்மு குழலார்போல மொய்கொ டும்பி
       யுருவப் பூங்கொம் பொசியப் புல்லித் தீந்தேன்பருகி
       யருகு வாய்விட் டார்ப்ப வண்ணன் மெல்லச் சென்றான்”

எனவருஞ் சிந்தாமனிச் செய்யுளும்,

      “புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக்
       கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
       எண்ணில ளிகந்திடு மியாவர் தம்மையும்
       நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே”

எனவருஞ் சூளாமணிச் செய்யுளும் ஒப்புநோக்கற் பாலன.                                                       (62)


63.         இதுவுமது

மக்கட் பயந்து மனையற மாற்றுதல்
  தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப
பைத்தர வல்குற் படிற்றுரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன் றின்றே.

            (இ-ள்.) தக்கது அறிந்தார்-மக்கட் பிறப்பிற்குரிய உறுதிப் பொருளை
அறிந்த சான்றோர்; பைத்து அரவு அல்குல் - நச்சுப்