பையையுடைய
பாம்பினது படம் போன்ற அல்குலையும்; படிறு
உடையாரொடு-பொய்ம்மொழியையும் உடைய கணிகை மகளிரோடு; துய்த்துக்
கழிப்பது - இன்பம் நுகர்ந்து வாழ்நாளைக் கழிக்குஞ் செயல்; தோற்றம்
ஒன்று இன்று - சிறிதும் மாண்புடையதொன்றன்று என்றும்; மக்கட் பயந்து -
கற்புடை மகளிரோடு கூடி இன்பம் நுகர்ந்து நன்மக்களையும் பெற்று; மனை
அறம் ஆற்றுதல்-விருந்தோம்பண் முதலிய இல்லறங்களைச் செய்தலே;
தலைமைக் குணம் என்ப - மக்கட்குத் தலைகிறந்த குணமாம் என்று ஓதுவர்
என்பதாம்.
(வி
- ம்.) கணிகையர் கூட்டரவாலே இன்பம் பெறுதலின்
அது
தீங்காகா தென்பார்க்கு விடையாக வந்தது இச் செய்யுள். இன்பம் நுகர்தல்
மட்டுமே மக்கட் பண்பிற்குச் சிறப்பாகாது. அறஞ் செய்தலே மக்கட் பிறப்பின்
பயனை நல்குவதாம். ஆகவே பொதுமகளிர் கூட்டரவால் இன்பமுண்டாயினும்
அதனாற் புகழுமில்லை பயனுமில்லை. இன்பத்தானும் கற்புடைய
மனைவியோடு கூடி நுகர்தல் வேண்டும். மேலும் நன்மக்களையும் பெற்று
விருந்தோம்பன் முதலிய இல்லறங்களைச் செய்தலே மக்கட் குறுதி பயப்பதாம்
என்றவாறு. இதனை,
“அறத்தான் வருவதே யின்பாற் றெல்லாம்
புறத்த புகழு மில” --குறள், 39
எனவும்,
“அன்பும் அறனும் உடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” --குறள், 5
எனவும்,
“இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை” --குறள், 47
எனவும்,
“தந்நலம்
பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்” --குறள், 916
எனவும்,
“இருமனப்
பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு” --குறள், 920
எனவும்
வருந் திருக்குறள்களானும் உணர்க. (63)
64. |
பண்புடைமை
நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் |
|
பகைநனி
தீது பணிந்தீயா ரோடு
மிகைமிகு பொருளென் றிறத்த லிலரே வகைமிகு வானுல
கெய்திவாழ் பவரே. |
|