நட்பு
நாரற்றுத்தீர்வர். வறுமை பெரிதும் இன்னாததாம் என்றவாறு. (65)
66. |
இதுவுமது
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர் |
|
நல்லவை
யாரு நனிமதிப் பாரல்லர்
கல்வியும் கைப்பொரு ளில்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொண்ணீ. |
(இ
- ள்.) கைப்பொருள்
சுருங்குபு இல்லார் சொல் -தம் கையிற்
பொருள் குறைந்து இல்லையான நல்குரவாளர் செயற்கரிய செய்து
புகழுடையராயினும் அப்புகழை; அவை சொல்லார் - யாரும் அவையின்கண்
பாராட்டிப் பேசார்; சூழ்ந்து உணர் நல் அவையாரும் - பொருளியல்பினை
ஆராய்ந்து அறியுமியல்புடைய நல்ல அவையகத்தார் தாமும், நனி
மதிப்பாரல்லர் - மிகவும் மதிப்பாரல்லர்; பயிற்றிய கல்வியும் புல் என்று
போதலை - அந் நல்குரவாளர் பலகாலும் பயின்ற கல்வி தானும் சிறப்புறாமற்
பொலிவற்றுப் போமென்பதனை: நீ மெய் என்று கொள் - நீ வாய்மையென்றே
அறிந்து கொள்வாயாக! என்பதாம்.
(வி
- ம்.) சொல் - புகழ் கைப்பொருள் சுருங்குபு
இல்லார் எனக்
கூட்டுக. நல்லவை யாரும் என்புழி உம்மை சிறப்பு. பொருளியல்புகளை
ஆராய்ந்துணரும் நல்லவையார் தாமும் மதியார் எனவே ஏனையோர்
மதியாமை கூறவேண்டுமோ! என்றவாறு.
இனி ‘ஏழை
சொல் அம்பல மேறாது’ என்னும் பழமொழிக்கிணங்க
நல்குரவாளர் கூறுகின்ற மொழியை அவையினர் ஏற்று எடுத்துச் சொல்லார்
எனினுமாம்.
இக்
கருத்தினை,
“இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு” குறள்,
752
எனவருந்
திருக்குறளானும்,
“நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉங்
கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தி னுழவேபோன் மீதாடிச்
செல்லாவா நல்கூர்ந்தார் சொல்”
எனவரும்
நாலடியானும் உணர்க.
இனி
நல்கூர்ந்தார் கல்வியும் சிறவாதென்பதனை,
“எனைத்துணைய
வெனு மிலம்பாட்டார் கல்வி
தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம்-மனைத்தக்காள்
|