மாண்பில
ளாயின் மணமக னல்லறம்
பூண்ட புலப்படா போல்” --நீதிநெறிவிளக்கம், 10
எனவரும்
குமரகுருபரவடிகளார் பொன்மொழியானும்,
“நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்” --குறள், 1046
எனவரும்
திருக்குறளானுமுணர்க. (66)
67. |
இதுவுமது
தொழுமக னாயினுந் துற்றுடை யானைப் |
|
பழுமரஞ்
சூழ்ந்து பறவையிற் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற் பழுமரம் வீழ்ந்த பறவையிற்
போப. |
(இ
- ள்.) தொழுமகன்
ஆயினும் - பிறரைத் தொழுது பிழைக்கும்
கீழ்மகனேயாயினும்; துற்று உடையானை - பொருளுடையானை; பழுமரம்
சூழ்ந்த பறவையில் சூழ்ப் - உலகமாந்தர் பழுத்த மரத்தைச் சூழ்கின்ற
பறவைக் கூட்டம் போன்று வந்து சூழ்ந்து கொள்வர்; விழுமியரேனும் - மற்று
அறிவு குணஞ் செயல்களாலே சிறப்புடைய மேன்மக்களாயினும்; வெறுக்கை
உலந்தால்-செல்வம் அழிந்து நல்குரவுடையராய பொழுது; வீழ்ந்த பழுமரம்
பறவையின் போப - (உலக மாந்தர்) விழுந்துபோன பழுமரத்தை விட்டுப்
போகின்ற பறவைக் கூட்டம் போன்று அகன்றுபோகா நிற்பர் என்பதாம்.
(வி
- ம்.) வீழ்ந்த பழுமரம் என மாறுக.
உலகமாந்தர் கீழ்மகனாயினும் பொருளுடையானைச் சூழ்ந்து கொள்வர்.
மேன் மக்களாயினும் வறியராயின் அணுகாது விலகிப் போவர் என்றவாறு.
துற்று: ஆகுபெயர்.
இதனை,
“இவறன்மை
கண்டு முடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றேவல் செய்ப-பெரிதுந்தாம்
முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று.”
எனவரும்
(நீதி நெறி விளக்கம் - 12) குமரகுருபரர் மொழியானும்,
“ஆகா தெனினு மகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்-யாதுங்
|