பக்கம் எண் :

82

எனவரும் மணிமேகலையானும் பொருளில்வழிக் குடிப்பிறப்பழியும் என்பது
முதலியனவு முணர்க.

     இருளிலே கண்ணிலெழுதப்பட்ட மை இருந்தும் இல்லாததுபோறலின்
வறுமை முதலியன உள்வழி, குல முதலியன இருந்தும் இல்லாதனவாகும்
என்பது கருத்து.                                          (68)


69.

நல்லாசிரிய ரல்லாதார் அறமுரைத்தலின் தன்மை

அந்தக னந்தகற் காறு சொலலொக்கு
      முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவது
நன்கறி வில்லா னஃதறி யாதவற்
கின்புறு வீட்டி னெறிசொல்லு மாறே.

     (இ - ள்.) முந்து செய் குற்றம் முழுவதும் கெடுப்பான் -பண்டு செய்த
தீவினையை முழுவதும் அழித்தற்குக் காரணமான; இன்பு உறும் வீட்டின்
நெறி - இன்பம் நிலையுதலுடைய வீடு பேற்றினையடையும் நன்னெறியினை;
நன்கு அறிவில்லான் - நன்கு அறிதலில்லாத மடவோன் ஒருவன்; அஃது
அறியாதவற்கு - அந்நன்னெறியினை முன்பே அறிந்திலாத மற்றொரு
மடவோனுக்கு; சொல்லும் ஆறு - அறிவுறுத்தும் வகை; அந்தகன்-ஒரு
குருடன்; அந்தகற்கு ஆறு சொலல் ஒக்கும் - ம்றோரு குருடனுக்கு நெறி
கூறு தலையே ஒக்கும் என்பதாம்.

     (வி - ம்.) அறிவிலார் அறிவில்லாதவர்க்கு நன்னெறி கூறுதல் குருடன்
குருடனுக்குச் செல்லும் நெறியினைக் கூறுதலையே ஒக்கும் என்றவாறு.
எனவே நல்லறங்களை அறிய முற்படுவோர் நல்லாசிரியர்பாற்சென்று அவர்
வாயிலாகவே அறிதல் வேண்டும் என்பது கருத்தாயிற்று. இச் செய்யுளோடு.

     “குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
      குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
      குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
      குருடும் குருடும் குழிவிழு மாறே”
         --திருமந், 1680

எனவரும் திருமந்திரச் செய்யுளை ஒப்பு நோக்குக.             (69)


70.          நாட்டு வளம்

செந்நெற் கரும்பினொ டிகலுந் தீஞ்சுவைக்
  கன்னலங் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கில னென்று பூகழு
முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.

     (இ - ள்.) செந்நெல் கரும்பினொடு இகலும் - இந்நாட்டு மருதநிலப்
பரப்பின்கண் சிவந்த நெல்லையுடைய பயிர்கள் கரும்புகளோடு மாறுபட்டு
வளரும்; தீம் சுவை கன்னல் அம் கரும்பு கமுகைக்