பக்கம் எண் :

83

காய்ந்து எழும் - இனிய சுவையினை யுடைய கன்னல் என்னும் அழகிய
அக்கரும்போ கமுகினை நீ எம்மை ஒவ்வாய் என வெகுண்டு
வளருவதுபோல் வளரும்; பூகமும் - அந்தக் கமுகோ இக்கரும்பின்
செருக்கினை யான் காணப் பொறேன் என்று நாணி, முன்னிய முகில்களால்
முகம் புதைக்கும் - ஆங்கு முற்பட்டு வருகின்ற முகில்களாகிய ஆடையாலே
தன் முகத்தினை மறைத்துக்கொள்ளும் என்பதாம்.

     (வி - ம்.) அந்த நாட்டினது மருத நிலத்திலே செந்நெற் பயிர்கள்
கருப்பஞ்சோலைபோல வளரும், கரும்புகளோ கமுகந் தோட்டம்போலக்
காணப்படும், கமுகந் தோட்டங்களோ முகில்களைத் தீண்டுமளவு வளமுற
வளர்ந்திருக்கும் என்றவாறு.

     செந்நெலும் கரும்புஞ் சேரக் கூறலின் மருதநிலம் என்பது பெற்றாம்
என்னை? மருதநிலம் புனைந்துரைக்கும் புலவர் மரபு அன்னதாகலின் இதனை,

       “மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
        பூடு கொண்ட பொதும்பரோ டுள்விராய்த்
        தோடு கொண்டபைங் காய்த்துவள் செந்நெலின்
        காடு கொண்டுள கண்ணக னாடெலாம்”

எனத் தோலாமொழித் தேவரும்,

      “வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி”

எனப் பட்டினப்பாலையும், (240)

      “கரும்பொடு செந்நெலுங் கவின்கொண் டோங்கிய”

எனக் கம்பநாடரும் ஓதுதலுணர்க.                        (70)


71.       பாசண்டச் சாத்தன்

பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட
  தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணா றியங்கும் விறலவ ராயினுங்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.

     (இ - ள்.) பண்ணால் திறத்தில் பழுது இன்றி மேம்பட்ட - பண் திறம்
என்று கூறப்படுகின்ற இசையிலக்கணங்களாலே சிறிதும் குற்றமில்லாமல்
மேன்மைபொருந்திய; தொண்ணூற்றறு வகைக் கோவைவும் வல்லவன் -
தொண்ணூற்றாறுவகைப்பட்ட சமயத் தருக்க நூற்கோவைகளையும்
ஐயந்திரிபறக் கற்று வல்லுநன் (ஆகிய சாத்தன் என்னும் தெய்வம்); விண்
ஆறு இயங்கும் விறலவர் ஆயினும் - வான்வழியே செல்லும்
வெற்றியையுடைய கந்தருவர் முதலிய தேவகணத்தாரேனும்; கண் நாறி நோக்கி
- தன் கண்ணொளியே வீசி நோக்கி, அச்சுறுத்தி; கடு நகை