செய்வான்
- அவர்கள் அஞ்சி நடுங்குதல் கண்டு கடிதாக வெகுளிச்
சிரிப்புச் சிரிப்பான் என்பதாம்.
(வி
- ம்.) இச்செய்யுளால்
வளையாபதி என்னும்
பெருங்காப்பியத்தின்கண் மகா சாத்திரன் என்னும் ஐயளுரைப்பற்றிய
கதையும் அமைந்திருந்தது என்று ஊகிக்கலாம்.
ஐயனார் என்னும் தெய்வம்., தொன்ணூற்றறுவகைச் சமயச் சாத்திரத்
தருக்கக் கோவையும் நன்கு கற்றவல்ல தென்பது பெற்றாம். இதனை,
சிலப்பதிகாரத்தில் சனாத்திறமுரைத்த காதையில் (15) பாசண்டச்
சாந்தற்குப்
பாடு கிடந்தாளுக்கு’
எனவரும் அடிக்கு அடியார்க்கு நல்லார், “பாசண்டம்
தொண்ணூற்றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக்கோவை” என்னை?
“பண்ணாற்றிறத்தில
செய்வான்.” என்றார்
வளையாபதி யினும்
ஆகலின்.”
என இச்செய்யுளைக் காட்டி விளக்குவதானு முணர்க.
இனி,
அப்பாசண்ட நூல் பண் திறம் என்னும் இசைவகையாலே
பாடப்பெற்றிருந்தன என்பது முணர்க. “பண் - நான்கு வகைப்படும்.
அவையாவன - பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்பன. திறம் -
அப்பண்ணின் திறங்கள். அவையாவன-பாலைக்குப் புறம் - தேவாளி;
அருகு-சீர்கோடிகம் பெருகு-நாகராகம். குறிஞ்சிக்குப் புறம் - செந்து;
அருகு-மண்டிலம்; பெருகு - அரி. மருதத்திற்குப் புறம் ஆகரி; அருகு - சாய
வேளா சொல்லி; பெருகு - கின்ரைம்: செவ்வழிக்குப் புறம் - வேளாவளி;
அருகு - சீராகம்; பெருகு - சந்தி. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க” என்பது
அடியார்க்கு நல்லார் நல்லுரை. (சிலப் - 14; 160 - 67) இன்னும்.
“நால்வகை யாழினும் பிறக்கும் பண்ணுக்கும் இன்றியமையாத
மூவேழுதிறத்தையும் குற்ற மின்றாக இசைத்து” (சிலப் - 5-5-7) எனவும்
அடியார்க்கு நல்லார் ஓதுதலும் காண்க.
விண்ணாறு இயங்கும் விறலவர் என்றது கந்தருவர் முதலாயினாரை,
மகாசாத்தன் பண்ணாற்றிறத்தில் பழுதின்றி மேம்பட்ட தொன்ணூற்றறுவகைக்
கோவையும் வல்லவன் ஆகலின் யாழோராகிய கந்தருவர்
விண்ணாறியங்குங்கால் கூர்ந்து நோக்கி எள்ளி நகைப்பன் என்றவாறு. நகை
- எள்ளலிற் பிறந்தது. கடுநகை - பெருஞ் சிரிப்பு. சினச்சிரிப்புமாம் (71)
காமுற்று
வருந்தும் ஒரு மகள்
72. |
அன்றைப்
பகற்கழிந் தாளின் றிராப்பகற் |
|
கன்றிற் குரலுங் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலு மொன்றல்
சுரும்பு நரம்பென வார்ப்பவும். |
(இ
- ள்.) அன்றைப்
பகற்கு அழிந்தாள் - அற்றைநாளின்
பகற்பொழுதிற்கே (இவ்வாறு) பெரிதும் துன்புற்றவள்; இன்று இராப்பகற்கு -
இப்போது எதிரே வருகின்ற அந்தப் பொல்லாத மாலைப்பொழுதிற்கு;
அன்றில் குரலும் - அன்றிற் பறவையின் குரலும்; கறவை மணிகறங்க -
நல்லான்களின் கழுத்திற் கட்டிய மணிகள் ஒலிமாநிற்ப, அவற்றைச் செலுத்தி
வருகின்ற; கோவலர்
|