கொன்றைப்
பழக்குழல் ஆம்பலும் - கொன்றைப் பழம் போன்ற
உருவமுடைய குழலோசையும், ஆம்பற்றண்டுபோன்ற குழலோசையும்; ஒன்றல்
சுரும்பு நரம்பென ஆர்ப்பவும் - பலவாகிய வண்டினங்கள் யாழ் நரம்புபோல
இனிதாக முரலவும்; என்க.
(வி
- ம்.) இதனால்
வளையாபதி காதற்சுவை கெழுமிய வரலாறமைந்த
பெருங் காப்பியமாம் என்பது ஊகிக்கலாம்.
இனி, கொன்றைப் பழக்குழலும் எனவேண்டிய எண்ணும்மை தொக்கது.
கொன்றைப் பழக்குழல் ஆம்பல் என்பன கொன்றைப்பழம் போலவும்
ஆம்பற்றண்டு போலவும் உருவமமைந்த குழற்கருவிகள். ஆம்பல் என்பதனை
ஒருவகைப் பண் என்பாருமுளர்.
இவற்றை,
“கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி”
எனவும்,
“பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குதம் மானுள் வருமே லவன்வாயிற்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி”
எனவும் வருந் தாழிசைகளானும், (சிலப் - ஆய்ச்சியர் 19 - 20)
இவற்றிற்கு “ஆம்பல் முதலானவை சில கருவி; ஆம்பல் - பண்ணுமாம்.
மொழியாம்பல், வாயாம்பல், முத்தாம்பல்” என்று சொல்லுவர் பண்ணுக்கு”
எனவரும் அரும்பதவுரையாசிரியர் குறிப்பானும்,
“கொன்றை ஆம்பல் (முல்லை) அன்பன சில கருவி. இனி அவற்றைப்
பண்ணென்று கூறுபவெனின், அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே
பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றையென ஒரு பண்
இல்லையாகலானும். கலியுள் முல்லைத் திணைக்கண், ஆறாம் பாட்டினுள்
‘கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் இமிழிசை மண்டை யுறியொடு
தூக்கி, ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர், வழூஉக் கோவலர் தத்த
மினநிரை, பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலந்தர்’ (கலி - 106; 1 -5)
எனக் கருவி கூறினமையானும் அன்றைப் பகற் கழிந்தான.ஆர்ப்பவும் என
வளையாபதியுள்ளும் கருவிகூறிப் பண் கூறுதலானும், இவை ஒருபொருண்மேல்
மூன்றடுக்கி வந்த வொத்தாழிசை யாதலானும், இரண்டு பண்ணும் ஒன்று
கருவியுமாகக் கூறின், செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேரலானும் அங்ஙனம்
கூறுதல் அமையாதென்க’ என வரும் ஆசிரியர் அடியார்க்கு நல்லார்
விளக்கவுரை யானும் உணர்க. (72)
அரிதிற்கிடைத்த வளையாபதிச்
செய்யுள் 72 ஆம்.
அவற்றிக்குப் பெருமழைப் புலவர்
பொ. வே. சோமசுந்தரனார் வகுத்த
சொற்பொருள் உரையும், விளக்கவுரையும்
முற்றும்.
|