என்பவாகலான்
நிற்றலாவது - அவ்வொழுக்கத்திற் பிறழாது ஒழுகுதல் முடிவு
என்றது. பரிதிருவாணத்தை (வீடுபேற்றினை) - நன்று நன்மை தரும் அறம்
குணம் - ஈண்டு - நன்மைமேற்று, தனக்கு என்று - தான் இன்புறுதற்
பொருட்டு. ஒன்றானும் - யாதொரு பொருளையும்,
“இயல்பாகு
தோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து” --குறள், 344
எனவும்,“விடல்வேண்டும் வேண்டியவெல்லாம் ஒருங்க”
எனவும்,
“பிறப்பறுக்குனுற்றார்க் குடம்பு மிகை”
எனவும்,“தலைப்பட்டார் தீரத்
துறந்தார்” எனவும்,
ஓதுபவாகலான் ’தனக்கென்று ஒன்றானும் உள்ளான்’
எனல் வேண்டிற்று அன்று ஏ: அசைகள்.
இனி,
துறந்தோர் சிலர் காடுபற்றியும் கனவரை பற்றியும் மலை முழைஞ்சு
புக்கிருந்தும் தனித் துறைதலும் ஒருவகையாற் றன்னலமே கருதிப் பிறர் நலம்
பேணாப் பீழையுடத்து ; எம்மிறையனோ தான் மெய்யுணர்ந்து நன்றின்கண்
நிலைபெற்றுழியும் அவ்வாறு தனித்திராமல் மன்னுயிரின் துன்பமெல்லாம்
போக்குதல் வேண்டும் என்னும் பேரருள் காரணமாகப் பெரிதும்
முயல்வானாயினன் என்பாள் பிறர்க்கு உறுதிக்குழந்தான் என்றாள். அவன்
என்றது அத்தகைய சான்றோனாகிய எங்கள் புத்தபெருமான் என்பதுபட
நின்றது. அவன் இறைவன், அவன் தாள் சரண் என அவன் என்பதனை
முன்னுங் கூட்டுக. சரண் அடைக்கலம். அடைக்கலம் புகுதலாவது அவன்
கூறிய அறநெறியிலே உறுதியாக நின்றொழுகுதல், இனி இக் குண்டலகேசிச்
செய்யுளை வழிமொழிந்து வருகின்ற நீலகேசிச் செய்யுளும் ஈண்டு ஒப்பு
நாக்கற்பாலது. அது வருமாறு.
“ஆதிதான்
பெரியனா யறக்கெடு மளவெல்லா
முதியமே யுணர்ந்தவ னுறுதரும மேயுரைத்தான்
யாதனையுந் தான்வேண்டா னயலார்க்கே துன்புற்றான்
போதியா னெம்மிறைவன் பொருந்தினா ருயக்கொள்வான்.
--நீலகேசி, குண்டல, 27
எனவரும்.
|
அவை அடக்கம்
|
2.
|
நோய்க்குற்ற
மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற
காத லுடையார்புகைத் தீமை யோரார்
போய்க்குற்றமூன்று மறுத்தான்புகழ் கூறு வேற்கென்
வாய்க்குற்றசொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே.
|
(இ
- ள்) நோய்க்கு உற்ற மாந்தர் - பிணிகட்கு
உறைவிடமாகப்
பொருந்திய மக்கள் : மருந்தின் சுவை நோக்ககில்லார் - அப்பிணி
தீர்தற்குக் காரணமான மருந்தினது சுவை இனிதோ’ இன்னாதோ’ என்று
ஆராய்வாரல்லர், தம் பிணி தீர்தல் ஒன்றே குறிக்கொள்வர்; தீக்கு உற்ற
காதல் உடையார்- குளிரால் வருந்தித் தீக்காயும் அவாவுடையோர்;
புகைத்தீமை ஓரார் - அத்தீயின் கண்ணதாகிய புகை தமக்குச் செய்யும்
தீமையை ஒரு பொருளாகக் கொள்ளார்; போய்க் குற்றம் மூன்றும்
அறுத்தான் - அரசவின்பத்தையும்
|