பக்கம் எண் :

5

களையும் புகழ் முதலியவற்றையும் விரும்புவோர் மனநலம் உடையராகவே
அவை யெல்லாந் தாமே வந்தெய்தும். மனந்தூயரல்லார்க்கும் இவைகள்
எய்தா; ஆதலின் மனந்தூயராய்த் தீவினையை எஞ்ஞான்றும் அஞ்ச
வேண்டும் என்றறிவுறுத்தவாறாயிற்று இதனோடு,

       “மனத்தூயார்க்கு கெச்சதன் றாகு மினந்தூயார்க்
        கில்லைநன் றாகா வினை”            --குறள், 456

எனவும்,
       
“மனநலம் மன்னுயிர்க் காக்க மினநல
        மெல்லாப் புகழுந் தரும்,”            --குறள், 457

எனவும்,

       “மனநலத்தின் ஆகு மறுமைமற் றஃது
        மினநலத்தி னேமாப் புடைத்து”        --குறள், 459

எனவும், வரும் அருமைத் திருக்குறள்களையும்,

       “பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
        எய்தாமை சொல்லின் வழுக்காத்து--மெய்யில்
        புலமைந்துங் காத்து மனமா சகற்று
        நலமன்றே நல்லா றெனல்”        --நீதிநெறி விளக்கம்,60

எனவும்,

       “மனத்த கறுப்பெனி னல்ல செயினும்
        அனைத்தெவையுந் தீயவே யாகும் --எனைத்துணையும்
        தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
        மாசின் மனத்தி னவர்”           --நீதிநெறிவிளக்கம், 58

எனவும் வரும் குமரகுருபரவடிகளார் பொன்மொழிகளையும் ஒப்பு
நோக்குக.                                         (3)

              மெய்த்தவம்

4.

போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகண் மெய்பூசல்
கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலு ணிற்றல்
சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலைய ராதல்
வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான்.

     (இ - ள்.) உடை போர்த்தல் - காவி ஆடை முதலியவற்றால்
உடம்பினைப் போர்த்துக் கோடலும் ; நீக்குதல் - ஆடையுடாது
விட்டுவிடுதலும் ; பொடித் துகள் மெய்பூசல் - சாம்பல் முதலியவற்றை
உடல் நிரம்பப் பூசிக்கோடலும் ; கூர்த்த பனி குளித்து ஆற்றுதல் - மிக்க
பனியினும் (மழையினும்) நீருட்குளித்து நின்று,