பக்கம் எண் :

7

  கல்லுண்டு கடிய வெம்புங் காணுறை புறவ மெல்லாம்
  புல்லிய வினையை வென்று புறக்கொடை காணு மன்றே” --சீவக,
1430

எனவும்,

 “நீட்டிய சடைய மாகி நீ்ர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
  வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னிற்
  காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டி னின்று
  வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமி னென்றான்”
-- சீவக, 1431

எனவும் வரும் சீவகன் மொழிகளும்,

    “மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
     பழித்த தொழித்து விடின்”                  --குறள், 280

எனவும்,

    “மனத்தது மாசாக மரண்டார்நீ ராடி
     மறைந்தொழுகு மாந்தர் பலர்”               --குறள், 278

எனவும்

    “புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
     மூக்கிற் கரியா ருடைத்து”                  --குறள், 277

எனவும் வரும் திருவள்ளுவர் பொன்மொழிகளும்,

    “நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
     கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
     எப்புலமும் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
     றிப்புலமுங் காவா திது”             --நீதிநெறி விளக்கம், 13

எனவருங் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் ஒப்புநோக்கற் பாலன.   (4)

நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனல்

5.
வகையெழிற் றோள்க ளென்றும்
   மணிநிறக் குஞ்சி யென்றும்
புகழெழ விகற்பிக் கின்ற
   பொருளில் காமத்தை மற்றோர்
தொகையெழுங் காத றன்னாற்
   றுய்த்தியாந் துடைத்து மென்பா
ரகையழ லழுவந் தன்னை
   நெய்யினா லவிக்க லாமோ.