பக்கம் எண் :

13

          “தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
           ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
           முதியோ ரென்னான் இளையோ ரென்னான்
           கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்
           வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
           மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
           மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ”

எனவரும் மணிமேகலைப் பகுதியும்,

   
 “கூற்றுவன் கொடிய னாகிக் கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து
     மாற்றரும் வலையை வைத்தான் வைத்ததை யறிந்து நாமும்
     நோற்றவன் வலையை நீங்கி நுகர்ச்சியி லுலக நோக்கி
     ஆற்றுறப் போத றேற்றா மளியமோஒ பெரிய மேகாண்”

எனவரும் சிந்தாமணிச் செய்யுளும், ஒப்பு நோக்குக.             (8)

        இதுவுமது

9.


 
பாளையாந் தன்மை செத்தும்
   பாலனாந் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்துங்
   காமுறு மிளமை செத்தும்
மீளுமிவ் வியல்பு மின்னே
   மேல்வரு மூப்பு மாகி
நாளுநாட் சாகின் றாமா
   னமக்குநா மழாத தென்னோ.

      (இ - ள்.) பாளை ஆம் தன்மை செத்தும்-யாம் நம்முடைய உடம்பு நந்
தாய்மாரின் வயிற்றின்கண் கருவாகியிருந்த நிலைமையிலிருந்து இறந்தும்;
பாலன் ஆம் தன்மை செத்தும் - பின்னர் எய்திய குழவிப் பருவம் இறந்தும்;
காளை ஆம் தன்மை செத்தும் - அப்பருவத்தின் பின் வந்தெய்திய
காளைப்பருவம் இறந்தும்; காமுறும் இளமை செத்தும் - அதன்பின்னர்
வந்ததும் காமுற்று மகளிரை மருவுதற் கியன்றதும் ஆகிய இளமைப் பருவமும்
இறந்தும் வந்துள்ளோம்; மீளும் இவ்வியல்பும் - இவ்வாறு மீண்டு மீண்டும்
இறக்கின்ற இந்த இயல்பினையே; இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி -
இப்பொழுதே இதற்கு மேலே வருகின்ற முதுமைப் பருவமும் எய்தாநிற்ப;
நாளும் நாள் சாகின்றாமால் - இவ்வாறே யாம் ஒவ்வொரு நாளும் இறப்பினை
எய்துகின்றோ மல்லமோ?; நமக்கு நாம் அழாதது என்னோ? - பிறர்
சாகின்றதற்கு