எனவருகின்ற இத் தொண்ணூற்றொன்பது
முதல்களையுடைய
தொண்ணூற்றொன்பது செய்யுளும் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்துச்
செய்யுள்களே என்று ஐயமின்றி அறிகின்றோம். இன்னும் நீலகேசி
உரைக்கிடையே வருகின்ற
சென்றெய்து
மவத்தையே, சிலவற்றாற் றரப்படுமோ
வன்றியு மப்பொருள்தோ றவ்வவத் தன்மையோ
நின்றதூஉத் திரிந்ததூஉ மன்றாயி னிகழ்வில்லை
யொன்றிய வொருவகையே லொருவகையாற் கேடுண்டோ
என்னும்
செய்யுளும் (நீலகேசி 377 ஆஞ் செய்யுளுரை.)
அளவிலாக்
கடைப்பிடி யொருநான்கும் பிறப்பென்னுங்
களையறுந் துன்பத்துக் கற்பநூ றாயிரமும்
விளைவாய போதியை யுறுமளவும் வினைமடியா
தளர்வின்றி யோடிய தாளினா னல்லனோ
என்னும்
செய்யுளும் குண்டலகேசி என்னும் அம்மாபெருங்காப்பியத்துச்
செய்யுள்களே என்று ஊகிக்கலாம்.
இனி,
நீலகேசியாசிரியர் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய
குண்டலகேசியின்கண், குண்டலகேசி என்பவள் ஆவண
நகரத்தின்கண்நாதகுத்தனார் என்னும் ஆருகதரோடு வாதிட்டு
ஆருகதசமயக் கொள்கை கட்கெல்லாம் குற்றம் கூறி ஆருகதர்
மெய்க்காட்சியுடையாரல்லர் என்று நிலைநாட்டி நாதகுத்தனாரை
வென்றதாக வருகின்ற பகுதியில், குண்டலகேசி தம் மதத்திற்குக் கூறிய
குற்றங்கட்கெல்லாம் விடையிறுத்தற் பொருட்டே மொக்கலவாதச்
சருக்கத்தைப் பாடியிருத்தலை அச்சருக்கத்தை ஓதுவோர் எளிதில் உணரலாம்.
நூலாசிரியர் கருத்துணர்ந்த உரையாசிரியராகிய சமய திவாகர முனிவரும்
மொக்கலவாதச் சருக்கத்தின்கண் மொக்கலன் கூற்று ஒவ்வொன்றற்கும்
இஃது இன்ன காதை (செய்யுள்) யை வழி மொழிந்தபடியாம் என்று மேலே
கூறிய செய்யுள் முதல்களைக் குறிப்பிட்டுப் போகிறார். மற்று நூலாசிரியர்
தாமும் மொக்கலன் நீகேசியைக் கண்டுழி; நீலகேசி யான் இரண்டு
பௌத்தசமயக்கணக்கர்களை வென்று வாகை சூடினேன். அவருள் ஒருத்தி
குண்டலகேசி என்பவள்
மற்றொருவன் அருக்கச்சந்திரன்
காண்
என்றாளாக அதுகேட்ட மொக்கலன் ஏடி ! பொய்யே புகன்றனை.
குண்டலகேசி பேராசிரியை
அவளை நீ வெல்லுதல் எங்ஙனம்? நுங்கள்
ஆருகத சமயத்துப் பேராசிரியராதிய நாதகுத்தனுரையே
அவன் வென்றனன். அவன்
உன்பாற் றோல்வியுறுவளோ? என்றானாக ; அதுகேட்ட
நீலகேசி, ஏடா ! எளியோய் நீ என்னை யறிந்திலை. குண்டலகேசி ஆவண
நகரத்துள் நாதகுத்தனாரை வென்றனள் என்று செருக்குறுகின்றனை. ஆவண
நகரத்தே குண்டலகேசி நாதகுத்தனாரை வென்ற வகையை அவள்
கூறியவாறே நீ எனக்குக் கூறிக்காண் ! யான் அவள் கூற்றெல்லாம்
குற்றமுடையன என்பதனையும் நாதகுத்தனார் கூறியவையெல்லாம் குற்றமற்ற
வாய்மைகளே யாதலையும் - கூறி எமது ஆருகத சமயச் சிறப்பை
இவ்வவையோரறிய நிலைநிறுத்துவல் - என. அதுகேட்ட மொக்கலனும்
அவ்வாறே குண்டலகேசி கூற்றினையே -
|