பக்கம் எண் :

94பால காண்டம்  

ஒளிரும்     செந்நிறமான    மாணிக்கங்களை    ஒழுங்காக அமைத்த;
புரிசைப்  பொன்  நகர்
-  வட்டமான  பொன்னால்  அமைந்த  மதில்
உடைய   அந்த  நகரம்;  அயோத்தியாள்  உடை-  அயோத்தியாகிய
பெண்ணினது;  நிழல் எனப்  பொலியும்- நிழலைப் போலக் கதிரவன்
விளங்கும்.

கதிரவனுக்கு    இயல்பான ஒளி இருக்குமாயின் உதய காலத்திலேயே
ஒளியோடு விளங்க வேண்டும்.  அவ்வாறு  இல்லை. மாலை நேரத்திலும்
கதிரவனுக்கு  ஒளி  இல்லை எனவே  அயோத்தி  நகரத்தின் ஒளியைக்
கொண்டே  சூரியன்  ஒளிர்கிறது. இது இச்  செய்யுளின்  கற்பனை. இது
தற்குறிப்பேற்றவணி.                                      41
 

134.ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்
பாய்ந்த தரையின் நிலை பகரல் வேண்டுமோ?

 

ஆய்ந்த   மேகலையவர்- நுட்ப வேலைப்பாடு அமைந்த மேகலை
அணிந்த  மகளிர்;  அம்பொன் மாளிகை வேய்ந்த- தமது கூந்தலுக்கு
மணமூட்ட.  மாளிகைகளிலே  எழுப்பிய;  கார்  அகில் புகை உண்ட-
கரிய  அகிற் புகையை உண்ட; மேகம் போய்த் தோய்ந்த- மேகங்கள்
சென்று  படிந்த; மா  கடல் நறும் தூபம் நாறு மேல்- அந்தப் பெரிய
கடலும்  அகிலின்  நறுமணம்  கமழும்  என்றால்;  பாய்ந்த தரையின்
நிலை
- மேகங்களிலிருந்து கீழே விழும்   மழைத்தாரையின் தன்மையை;
பகரல்   வேண்டுமோ
-  அதுவும்  அகில்  மணம்  கமழ்கிறது  எனச்
சொல்லவா வேண்டும்?

மகளிர்     எழுப்பிய அகில் புகையை உண்ட மேகங்கள்   கடலில்
படிவதால்  கடலும்  அகில்  மணம்  வீசுகிறது. மேகத்திலிருந்து   கீழே
விழும்  மழைத்  தாரை  மணம்  கமழ்வதைச்  சொல்ல   வேண்டுமோ
என்பது கருத்து. இது தொடர் நிலைச் செய்யுட் பொருட் பேரணி.   42
 
                         ஆடல் பாடல் முதலிய விளையாட்டுகள்
 

135. குழல் இசை மடந்தையர் குதலை. கோதையர்
மழலை. -அம் குழல் இசை; மகர யாழ் இசை.
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.
 

குழலிசை    மட்சந்தையர் குதலை- கூந்தல் வாரி முடிக்கமுடியாத
நிலையில்  உள்ள  இளம் பெண்களின் குதலைச் சொற்கள்; அம் குழல்
இசை
-  அழகிய   குழலோசையை  ஒத்திருக்கும்; கோதையர் மழலை-
மங்கைப்பருவ  மகளிரின்     மழலை மொழிகள்; மகர யாழிசை- மகர