மகர யாழ் - மகர யாழிலே எடுத்த (விரலாலே நெருடி கவர்ந்தெடுக்கப்பட்ட); இன் இசை- இனிய இசையொலிகள்; நிறங் கிளர்- உள்ளக் கிளர்ச்சி தரும் பாடல்கள் காரணமாக வாய்ப்பாட்டோடு; இறங்கவே- யாழ் இசை நலிந்தொலிப்பன; நிமிர்வ- எடுத்தொலிப்பன; அவ்வழி- அந்த முறையில்; வள் விசி கருவி- வார் கட்டிய கருவியாகிய முழவுகள்; கறங்குவ- ஒலிப்பன (அந்த இசையைக் கேட்டு); மகளிரோடு- பெண்களோடு; ஓதும் கிள்ளைகள்- பேசும் கிளிகள்; கண்முகிழ்த்து உறங்குவ- கண்ணை மூடிக் கொண்டு உறங்குவனவாம். மகரயாழ் பத்தொன்பது நரம்புகள் கொண்டது. இறங்குவனவும் நிமிர்வனவுமாகிய இசையோட்டங்களை முறையே அவரோகணம். ஆரோகணம் என்பர். யாழிசைக்கு ஏற்ப முடிவுகளும் முழங்குவனவாம். இசை நயத்தில் ஈடுபட்டுக் கிளிகள் உறங்குகின்றன. வள்: தோல். விசி கருவி: வினைத்தொகை. 48 மகளிர் மேனி |