தண்ணுமை. பாணி. பண். உற- மத்தள ஒலி. தாள ஓசை. பாட்டு ஒலி இவைகளுக்குப் பொருந்த; விதிமுறை விதங்களின்- நாட்டிய நூல்முறைப்படி பல விதங்களாக; பதங்களில் சதிமிதிப்பவர்- பாதங்களால் சதிபெற வைத்து நடனம் ஆடுபவர்கள்; மதங்கியர்- ஆடல் பாடல்வல்ல பெண்கள் ஆவர்; அச் சதி வகுத்துக்காட்டுவ- அந்தத் தாளச் சதியை விவரித்துக் காட்டுபவை; சதங்கைகள்- அப்பெண்கள் கால்களில் அணிந்துள்ள சதங்கைகளும்; அல்லன புரவித்தாள்களே- அவ்வாறு ஆடுகின்ற குதிரைகளின் கால்களுமே. அந்த நகரத்துப் பெண்களின் நாட்டியச் சிறப்பும். குதிரைகளின் ஆட்டச் சிறப்பும் கூறப்பட்டன. குதிரை தாளத்துக்கேற்ப ஆடும் என்பதை மேலே (751) எழுச்சிப் படலத்திலும் கூறுவார். பதங்கள்: பாதங்கள். தண்ணுமை: மத்தளம். பாணி: கைத்தலம். சதி: தாளஒத்து. மதங்கியர்: ஆடு மகளிர். 52 மகிழ்ச்சிப் புலப்பாடு |