பக்கம் எண் :

100பால காண்டம்  

பெண்களின்   புன்முறுவல்   -     அவர்கள்பால்  காதல்கொண்ட
ஆண்களின்  காதல்  நோயை மிகுவிக்கும் பெண்களின் இடை மெலிவது
கண்டு.   அவர்களது   கொங்கைகள்   அவ்விடை  மேலும்  மெலிந்து
வருந்துமாறு.   முத்து   மாலைகளையும்.  பொன் அணிகளையும் பூண்டு
மகிழ்கின்றன   என்கிறார்.   இதனால்  ஒருவர்  வருந்த.  மற்றொருவர்
மகிழும் உலக இயற்கை கூறப்படுகின்றது. வெந்துயர்:  கொடிய   துன்பம்
(இங்குக்    காம    வேதனை).  இதுமுதல்  13  பாடல்களில்  அந்நகர
மாந்தரின் மகிழ்ச்சி கூறப்படும்.                              53
 

146.இடை இடை. எங்கணும். களி அறாதன:-
நடை இள அன்னங்கள்; நளின நீர்க் கயல்;
பெடை இள வண்டுகள்; பிரசம் மாந்திடும்
கட கரி; அல்லன மகளிர் கண்களே!
 

இடை   இடை   எங்கணும்  களி  அறாதன-  இடங்கல்தோறும்
எப்பொழுதும்  மகிழ்ச்சி நீங்காமலிருப்பவை; நடை இள அன்னங்கள்-
அழகிய நடையுடைய  இளமையான அன்னங்களும்; நளின நீர்க்கயல்-
தாமரை     மலர்கள்  பூத்த  நிர்நிலைகளில்  உள்ள  கயல் மீன்களும்;
பெடை  இள வண்டுகள்
- தம் பெண் இனத்துடன் கூடி வாழும் ஆண்
வண்டுகளும்;  பிரசம்   மாந்திடும்   கடகரி-  பிரசத்தை  உண்ணும்
மதயானைகளும்;  அல்லன  மகளிர்  கண்களே- இவற்றை அல்லாமல்
பெண்களின் கண்களுமேயாம்.                              54
 

147.தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும். மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும். கொடித் திண் தேர்களே.
 

தழல்விழி ஆளியும் துணையும்-  நெருப்பென விழிக்கும் கண்களை
உடைய     ஆண்   சிங்கங்களும்   துணையான  பெண்சிங்கங்களும்;
தாழ்வரை   முழை   விழை
-   தங்குவதற்கு  ஏற்றனவாகிய  மலைக்
குகைகளை விரும்பும்; கிரி  நிகர்  களிற்றின்  மும்மத மழைவிழும்-
மலை போன்ற  யானைகளின் மதநீர் மழை பொழியும்; விழும் தொறும்
மண்ணும்  கீழ்உற குழை விழும்
- அவ்வாறு மழை சொரியும் தோறும்
நிலமும்  ஆழமாகுமாறு  சேறாகும்;  அதில்  கொடித்திண்  தேர்கள்
விழும்
-    அந்தச்  சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதை
யுண்ணும்

நெருப்பெழும்       விழிகொண்ட   ஆண்   சிங்கமும்    அதன்
பெண்சிங்கமும்    தங்குவதற்கு  ஏற்ற குகைகள் கொண்டது அம் மலை;
அந்த   மலைபோன்ற    யானைகளின்   மும்மதமும்  மழை  போலப்
பொழிவதால்  மண்ணொடு  கலங்கித் தரை சேறாகும்; அந்தச் சேற்றிலே
தேர்கள்  புதையுண்ணும்.   இப்பாடலின்   செய்தி  இது.  ‘தழல்  விழி
ஆளியும் துணையும் தாழ்வரை மழை விழை’ என்ற