பக்கம் எண் :

  நகரப் படலம்107

160.கரியொடு கரி எதிர் பொருத்தி. கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி. வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடி. போர்க் கலை
தெரிதலின். பொழுது போம்- சிலர்க்கு. அச் சேண் நகர்.

 

கரியொடு  கரி  எதிர் பொருத்தி -  யானையோடு  யானையை
எதிர்த்துப்  போர் புரியவிட்டு;  கைப்படை  வரி  சிலை  முதலிய
வழங்கிய
-   கையில்   உள்ள   படைகளான   கட்டமைந்த   வில்
முதலியவைகளைப்  பயின்றும்;  வாள் உளைப்புரவிய- நீண்ட பிடரி
மயிரை  உடைய  குதிரைகளின்  மீது  ஏறிக்கொண்டுப்;  பொரு இல்
செண்டு ஆடி
- ஒப்பற்ற  ‘செண்டு’  என்ற பந்தாடியும்; போர்கலை
தெரிதலின்
-போருக்குரிய கலைகளைத் தெரிந்து பயின்றும்; அச்சேண்
நகர்
- அந்தச் சிறந்த நகரத்தில்; சிலர்க்குப் பொழுதுபோம்- மற்றும்
சில பேருக்குப் பொழுது போகும்.

யானையுடன்    யானையை மோதவிடும் வீர விளையாட்டுகளிலும்.
வில்  முதலிய  படைப்பயிற்சி  செய்வதிலும்.  குதிரை மீதேறிப்  பந்து
விளையாடுவதிலும்    போருக்குரிய    கலைகளைப்     பயில்வதிலும்
அந்நகரத்தில்   சிலருக்குப்  பொழுது  போகும்  என்றதால்   இங்குக்
குறிப்பிடப்படுபவர்கள்  போர்  வீரர்கள்  என அறியலாம்.  பொருத்தி:
பொருந்தச்  செய்து  (பிற  வினைப் பெயரெச்சம்). உளை:  பிடரிமயிர்.
செண்டு:  குதிரையில்  ஏறியாடு  பந்தாட்டம் (இதனை இக்  காலத்தார்
‘போலோ’ என்பர். தெரிதல்- அரிதல்.                         68
 

161.நந்தன வனத்து அலர் கொய்து. நவ்விபோல்
வந்து; இளையவரொடு வாவி ஆடி. வாய்ச்
செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி. சூது
உந்தலின் பொழுது போம்- சிலர்க்கு. அவ் ஒள் நகர்.

 

நந்தனவனத்து  அலர்கொய்து -  நந்தனவனம் சென்று மலர்ந்த
மலர்களைப் பறித்தும்; நவ்வியபோல் வந்து -  பெண்மானைப்  போல
வந்து; இளையவரொடு வாவி ஆடி - தம்மை ஒத்த  இள  மகளிருடன்
பொய்கையில்  நீராடியும்; வாய்ச்செந்துவர்  அழிதர-  தமது வாயின்
பவள  நிறம்  அழியுமாறு;  தேறல் மாந்தி- தேனைப் பருகியும்;  சூது
உந்தலின
-  தாயமாடும்  முதலிய விளையாட்டுகளனைத்தும்   ஆடியும்;
அவ்வொள் நகர் சிலருக்குப் பொழுது  போம்- அந்த   ஒளிமிக்க
நகரிலே வாழும் மற்றும் சிலருக்குப் பொழுதுபோகும்.

நந்தவனத்திலே     மலர்கள் பறித்தும் மான் போல நடந்து இளம்
பெண்களுடன்   பொய்கையில்  நீராடியும்  வாயின்  செந்நிறம்  மாற.
தேனைப்   பருகியும்  தாயமாடியும்  சிலருக்குப்   பொழுது   போகும்
என்றதால் இங்குக் கூறப்படுபவர்