நேமி மால்வரை மதில் ஆக- சக்கரவாளம் என்னும் பெயருடைய உலகைச் சூழ்ந்திருக்கும் பெருமலையே மதிலாகவும்; நீள்புறப் பாம மாபுறக்கடல் கிடங்காத-நீண்ட. பரப்புடைய பெரும்புறக்கடல் என்னும் பெயருடைய கடலே அகழியாகவும்; மலைபல் மணிவாமம் மாளிகை ஆக- மலைகள் யாவும். பலவகை மணிகள் நிறைந்த அழாகான மாளிகைகள் ஆகவும் இருந்தது; பூமியும் அயோத்தி மா நகரம் போலும்- நிலம் முழுவதுமே அப்பேரரசனது தலைநகரமாகிய அயோத்தி போன்றிருக்கிறது. உலகம் முழுவதும் அவ்வேந்தனது செங்கோல் செல்லும் என்பது கருத்து. ‘சக்கரவாளகிரி’ என்பது உலகைச் சூழ்ந்திருக்கும் பெருமலை. அப்பெருமலையைச் சூழ்ந்திருக்கும் பெருங்கடல். பெரும்புறக்கடல் என்னும் பெயருடையது என்பது புராண நூல் கருத்து. மால்: மயக்கம். மால்வரை: பார்ப்பவரை வியப்பால் மயங்கச் செய்யும் மலையாகும். பாமம்: பரப்பு. வாமம்: அழகு. ஏ: அசை. அயோத்தி என்பது ஒருவராலும் வெல்ல இயலாதது என்னும் பொருள் உடைய வடமொழிப் பெயர். 7 |