திரை கெழு பயோததி துயிலும்- அலைகள் கெழுமிய பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்; தெய்வ வான் மரகத மலையினை- தெய்வத்தன்மை பொருந்திய உயர்ந்த மரகதமலை போன்ற திருமாலை; நெஞ்சினால் வழுத்தி- மனத்தால் வணங்கித் துதித்து; கர கமலம் குவித்து-தாமரை போன்ற கைகளைக் கூப்பி; இருந்த காலையில்- (தியானித்து) இருந்தபோது; பரகதி உணர்ந்தவர்க்கு - மேலான கதியிது என உணர்ந்து துதிப்பவர்களுக்கு; உதவு பண்ணவன்- காலம் தாழ்த்தாது உதவும்திருமால் ‘வந்து தோன்றினான்’ என்ற அடுத்த பாடல் தொடருடன் பொருள் முடிவு பெறும். கெழு: கெழு முதல் (பெருகியிருத்தல்) பயம்: பால். உததி: கடல்; பயோதறி: பாற்கடல். மரகதம்: பச்சை நிறமணி. மரகத மலை: பச்சை மாமலை போன்ற திருமால் உணர்த்தும் உவமையாகு பெயர். பரகதி: மேலாம்துணை. பண்ணவன்: மெய்ஞ்ஞானியாம். நெஞ்சினால் வழுத்தல்: மனத்தால் துதித்தல். கரகமலம் குவித்தல்: கைகளால் தொழுதல். கரகமலம்: உருவகம். 11 |