பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்133

எம்   சிறுமை என்றார்- எமது தாழ்வு தீர்ந்தது என்றார்கள்; மா இரு
ஞாலம்   உண்டோன்
-  அகன்ற  பெரிய  இவ்வுலகை  உண்டருளிய
திருமால்;  கழலுன் மேல்சரணம் வைத்தான்- தான் ஏறிவந்த கருடன்
மீது திருவடிகளை வைத்தான்.

உவகை   பூத்தல்: மகிழ்ச்சியில் முகம் மலர்தல் போல்வது.  தீர்ந்தது
என்பன   விரைவும்.   உறுதியும்  பற்றி   வந்த   இறந்த  காலவினை
முற்றுக்கள். ‘சரணம் வைத்தான்’ கருடன் மீது  திருவடிகளை  வைத்துத்
தனது  இருப்பிடத்துக்குப் புறப்படத்  தொடங்கினான்  என்பது கருத்து.
என்னா:  என்று;  செய்யா  என்ற  வாய்பாட்டு வினை எச்சம்  செய்து
என்ற  பொருளையுடையது.  உளோன்:  ‘உள்ளோன்’ இடை  குறைந்து
நின்றது.  மா.  இரு: உரிச் சொற்கள். மிகப்பெரிய என்பதை  உணர்த்தி
நின்ற  மீமிசைச்  சொல் ஊழிப் பெருவெள்ளத்தில்  உலகம்  அழியாது.
திருமால்  அதனை உண்டு. வயிற்றில் வைத்துப்  பாதுகாத்தார்  என்பது
புராணக்  கருத்து. “உலகம் உண்ட பெருவாயன்” என.  நம்மாழ்வாரும்
இதனைக் குறிப்பிடுவார்.                                     24
 

204.

என்னை ஆளுடைய ஐயன்.
   கலுழன்மீது எழுந்து போய
பின்னர். வானவரை நோக்கி.
   பிதாமகன் பேசுகின்றான்;
“முன்னரே எண்கின் வேந்தன்
   யான்”- என. முடுகினேன்; மற்று.
அன்னவாறு எவரும் நீர்போய்
   ‘அவதரித்திடுமின்’ என்றான்.
 

என்னை ஆளுடைய ஐயன்-என்னை ஆட்கொண்ட தலைவனாகிய
திருமால்;  கலுழன்  மீது  எழுந்து  பொய்  பின்னர்-  கருடன்மீது
எழுந்தருளிச்  சென்றதன் பின்பு;  பிதாமகன்  வானவரை  நோக்கிப்
பேசுகின்றான்
-  நான்முகன்.   தேவர்களைப்  பார்த்துப் பேசலானான்;
முன்னரே  எண்கின் வேந்தன் யான்  என  முடுகினேன்
- முன்பே.
கரடிகட்கு   அரசனான   ‘சாம்பவந்தன்’   என்பவனாக  நான்  வந்து
பிறந்துள்ளேன்;    மற்று.  அன்னவாறு   நீர்   எவரும்   போய்
அவதரித்திடுமின் என்றான்
- மற்றும். அப்படியே நீங்கள் எல்லோரும்
சென்று அவதரித்திடுவீராக என்று கூறினான்.

உயிரினங்களின்     தலைவர்களுக்  கெல்லாம்  தந்தை நான்முகன்
ஆதலின்   ‘பிதாமகன்’  என  பிரமனைக்  கூறுதல்   மரபு.  என்னை
ஆளுடைய  ஐயன் எனக் கூறியது. கம்பருக்குத்  திருமாலிடம்  மிகுந்த
ஈடுபாடு    இருந்ததைக்    காட்டும்.    முடுகினேன்:     கிட்டினேன்
(வந்திருக்கிறேன்  என்பது  பொருள்).  அவதரித்திடுமின்:   மின்னீற்று
வியங்கோள் கட்டளைப் பொருளில் வந்தது. மற்று:  வினைமாற்ற  வந்த
அசைச் சொல். அன்று ஆறு: அந்த விதமாக (அவ்வாறே).        25