பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்135

கிறேன்     என்று கூறலானான்;  மற்றைத் திசையுளோர்க்கு அவதி
உண்டோ
- எனவே.  மற்றுமுள்ள எல்லாத்திசைகளிலும் வாழ்பவர்க்கும்
எந்தத் துன்பமும் உண்டோ (இல்லை என்பதாம்).

மருந்து:   காற்று   மருத்தின்   மகன்   மாருதி (அனுமன்). புராரி:
திரிபுரத்தை  அழித்தவரான  சிவபிரான்.  காற்று  எனது அம்சம் என
அனுமன்.  மற்றத்  தேவர்கள்  எல்லோரும்   வானரங்களாகப் பிறக்க
நாங்கள்  முடிவெடுத்து  விட்டோமென.  சிவபிரான்   தானும் காற்றின்
சேயான  அனுமனாய்  அவதரிப்பதாகக்  கூறினார்   என்பது  கருத்து.
அவதி:  வருத்தம்  (துன்பம்)  எனவே.  இனிஎங்கு  வாழ்பவர்களுக்கும்
எந்தத் துன்பமும் இல்லையாம் என்றார்.

காசினி:   உலகம். மற்கடம்: குரங்கு காய்தல்: சினத்தல். போய்+இட:
போயிட.  “இட” என்ற துணை வினை எதிர்காலம் உணர்த்தி நின்றது.
போக என்பது பொருள்.                                   27
 

207.

அருல் தரும் கமலக்கண்ணன்
   அருள்முறை. அலர் உளோனும்
இருள் தரும் மிடற்றினோனும்.
   அமரரும். இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில். மண்ணில்.
   வானரர் ஆகி வந்தார்;
பொருள்தரும் இருவர் தம்தம்
   உறைவிடம் சென்றுபுக்கார்.
 

அருள்தரும்    கமலக் கண்ணன் அருள்முறை- கருணைமிக்க
தாமரைக்   கண்ணனாகிய  திருமால்  அருள்  செய்த  முறைப்படியே;
அலருளோனும் இருள்தருமிடற்றினோனும்
-தாமரை மலரில் உறையும்
பிரமனும் இருண்டமிடற்றை உடைய சிவபிரானும்; அமரரும் இளையர்
ஆகி
-    மற்றத்    தேவர்களும்    மேலே    கூறிய    முறைப்படி
வடிவெடுத்தவராகி;   மருள்தருவனத்தில்-   இருண்ட   காடுகளிலும்;
மண்ணில் வானரராகி வந்தார்
-  நிலத்திலும்  குரங்குகளாக உருமாறி
வந்துள்ளார்கள்;  பொருள்தரும் இருவர்- எல்லோரும் பொருட்டாகக்
கருதிப்   போற்றும்   பிரமன்.  சிவன்   ஆகிய  இருவரும்;  தம்தம்
உறைவிடம்  சென்று  புக்கார்
- தங்கள். தங்கள் உறைவிடங்களுக்குச்
சென்று சேர்ந்தார்கள்.

பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சை உண்டு. தேவர்களைக்
காத்தபோது   அந்த   நஞ்சு   மிடற்றிலே   நின்றுவிட   சிவபிரான்
நீலகண்டனாயினான். அதனையே  “இருள்தருமிடற்றினோன்”  என்றார்.
பொருள்தரும்: குறிப்பிட்டுக் கூறத்தக்க இருவர் பிரமனும்.  சிவபிரானும்
என்பதைக்   குறித்தது.  திருமால்  அருளிய  முறைப்படி   தேவர்கள்
யாவரும்  வானரங்களாகித்  தங்கள்  இருப்பிடங்களை   அடைந்தனர்
என்பது கருத்து.                                          28