பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்137

மாமுனி     சரணம்  சூடி - மாபெரும்  முனிவனாகிய  வசிட்டனது
பாதங்களை  வணங்கி  (தலைக்கு  அணியாக அணிந்து); உன்னையே
புகல்புக்கேனுக்கு
-   தங்களையே   அடைக்கலம்   அடைந்திருக்கும்
அடியவனாகிய எனக்கு; உறுகண் வந்து அடைவது உண்டோ-துன்பம்
வந்து சேர்தல் உண்டோ? (இல்லை என்றபடி); அன்னதற்கு அடியேன்
செய்யும் பணி  இனிது அளித்தி  என்றான்
-  அந்த  வேள்வியைச்
செய்வதற்கு   அடியவனாகிய  நான்  செய்ய   உரிய  பணிவிடையை
இனிதே எனக்குத் தருக என்று கூறினான்.

முனிவன்:   உலகப் பற்றற்றவன் (உலகியலின்பங்களை வெறுத்தவன்).
பொங்க.  எழுந்த  என்பன  மகிழ்ச்சி  மிகுதியைக்   காட்டி  நின்றன.
புக்கேனுக்கு:  புக்கேன்  வினையாலணையும் பெயர்.  புக்குநின்ற  நான்
என்னும்  பொருள்தந்து  நின்றது.  உறுகண்:  துயரம்.   பணி:   முதல்
நிலைத் தொழிற் பெயர். வேலை என்னும் பொருள் உடையது.

முனிவன்     கூறிய மொழி கேட்ட மன்னன். ‘அந்த வேள்வியைச்
செய்ய  நான்  செய்ய  வேண்டியதைக்  கட்டளை  இடுங்கள்’  என்று
கூறினான் என்பது கருத்து.                                  30
 

210.

‘மாசு அறு சுரர்களோடு மற்றுளோர்தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன். விபாண்டகன். கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன். இருங் கலை பிறவும்
                                       எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான். திருவருள் புனைந்த மைந்தன்.

 
 

மாசு     அறு சுரர்களோடு - குற்றமற்ற தேவர்களுடனே; மற்று
உளோர்தமையும்
-  மற்று  முள்ள அசுரர்  முதலானோரையும்; ஈன்று
காசிபன்  அருளும்  மைந்தன்
-  பெற்ற தந்தையான  காசிபர் பெற்ற
குமாரனும்;   கங்கை   சூடும்ஈசனும்  புகழ்தற்கு-   கங்கையாற்றைச்
சடையில்  தாங்கிய சிவபெருமானும் புகழ்ந்து கூறுவதற்கு; ஒத்தோன் -
ஒத்த பெருமையுடயவனும்; இருங்கலை பிறவும் எண்ணில் தேசுடைத்
தந்தை ஒப்பான்
- மேலான கலையறிவு போன்றவைகளை எண்ணினால்
சிறந்த    தனது   தந்தையான    காசிபனை    ஒத்தவனும்   ஆகிய;
விபாண்டகன்
-   விபாண்டகன்   என்னும்   முனிவனது;  திருஅருள்
புனைந்த மைந்தன்
- திருவருளைப் பெற்றுத்திகழும் புத்திரன்.

இந்தப்பாடல்   குளகம்: அடுத்த பாடலுடன் பொருள் முடிவுபெறும்.
தேவர்களையும்.   அசுரர்   முதலியோரையும்   பெற்றவர்    காசிபர்.
உபபிரமாக்களில் ஒருவர் இக் காசிபரின் குமாரர்.

விபாண்டகர்     தமது தந்தையைப் போலவே கலையறிவு மிக்கவர்.
இந்த  விபாண்டகரின் குமாரரே கலைக்கோட்டு முனிவர் என வசிட்டர்
தயரதனுக்கு முனிவர் வரலாற்றைக் கூறியதை உணர்த்தும் பாட்டு இது.