பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்139

பாந்தளின்    மகுடகோடி பரித்த- பாம்பினது பல தலைகளாலும்
தாங்கப்  பெற்ற; பார் அதனில்  வைகும் மாந்தர்கள்- இவ்வுலகிலே
வாழும்  மனிதரை; விலங்கு  என்று உன்னும் மனத்தன்- மிருகங்கள்
என   நினைக்கும்  மனத்தை  உடையவனும்;  மாதவத்தன் -  சிறந்த
பெருந்தவம்   உடையவனும்;   எண்ணின் -   எண்ணிப்  பார்த்தால்;
பூந்தவிசு  உகந்து  உளோனும்
- தாமரை ஆசனத்தை விரும்பி அதில்
அமர்ந்துள்ள  பிரமனும்; புராரியும் புகழ்தற்  கொத்த  சாந்தனால்-
திரிபுரத்தை   அழித்த   சிவனும்   புகழத்தக்க   பொறையாளனுமான
அக்கலைக்கோட்டு  முனிவனாலே; வேள்வி  முற்றின்  தனையர்கள்
உளர்ஆம்     என்றான்
-     மகப்    பேறளிக்கும்   வேள்வியை
நிறைவேற்றினால் புத்திரர்கள் உண்டாவார்கள் என்றான்.

பாந்தள்:     பாம்பு. இங்கு ஆதி சேடனைக் குறிக்கும். மகுடகோடி:
கோடி  என்பது ‘பல’ என்ற பொருள் தந்து நின்றது. பரித்த:   தாங்கிய.
உலகியல்  அறிவு  இன்மையால்  பிற  மாந்தரை  விலங்குகள்   எனக்
கருதும்  தவ  முனிவனும்  பிரமனும்.  சிவனும் புகழத்தக்க   பெருமை
உடையவனுமான    அம்    முனிவனைக்   கொண்டு    வேள்வியை
நிறைவேற்றினால்   மக்கட்   பேறு  வாய்க்கும்  என்றான்   வசிட்டன்
என்பது பாடற்கருத்தாம். பூந்தவிசு: தாமரை ஆசனம்.             33
 

213.

ஆங்குரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன். செய்ய
பூங் கழல் தொழுது. வாழ்த்தி. பூதல மன்னர்மன்னன்
‘தீங்கு அறு குணத்தால் மிக செழுந் தவன் யாண்டை
                                   உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி. இறைவ!
                                    என்றான்

 

ஆங்கு  இனைய உரை கூறும்- அப்போது. இத்தகைய  நல்லுரை
கூறிய;   அருந்தவர்க்கு  அரசன்- அரிய  தவத்தினர்களுக்கெல்லாம்
தலைவனாக விளங்கும் வசிட்ட முனிவனது;செய்ய பூங்கழல் தொழுது
வாழ்த்தி
- அழகிய பாத மலர்களை வணங்கிப் போற்றி; பூதல மன்னர்
மன்னன்
-  உலகத்து  அரசர்க்கெல்லாம் அரசனான தயரதன்; தீங்கறு
குணத்தால் மிக்க செழுந்தவன்
-குற்றமற்ற. நற்குணங்களால் உயர்ந்த
செழுமைமிக்க    அந்தத்    தவமுனிவன்;  யாண்டை   உள்ளான்-
எங்கிருக்கிறான்?;    ஈங்கு    யான்   கொணரும்-  இங்கு   நான்
அம்முனிவனை  அழைத்துக்  கொண்டு  வரும்  விதத்தை;   இறைவ!
அருளுதி  என்றான்
-  எனக்குத்  தெய்வம்  போன்றவனே!  அருளிச்
செய்வாயாக என்றான்.

உரை:  சொல்லாகு பெயர். செய்ய: செம்மை என்னும் பண்படியாகப்
பிறந்த  குறிப்புப்  பெயரெச்சம்.  பூ:  அழகு. கழல்:  தனியாகு பெயர்.
அறு  குணம்:  வினைத்  தொகை. ‘யாண்டை யாண்டு என்பது ஐகாரச்
சாரியை பெற்றது.