பக்கம் எண் :

140பால காண்டம்  

தனது   குலகுருவான  வசிட்டனை.  தொழு குலமாகக் கருதி “இறைவ”
எனத்  தயரதன் அழைத்தான்.  செழுமை+தவம்:  செழுந்தவம் உயர்ந்த
தவம் என்னும் பொருள் உடையது.                           34
 

214.

‘புத்து ஆன கொடு வினையொடு அருந் துயரம்
   போய் ஒளிப்ப.- புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன். தயையினொடும்
   தண் அளியின் சாலை போல்வான்.
எத்தானும் வெலற்கு அரியான். மனுகுலத்தே
   வந்து உதித்தோன். இலங்கும் மோலி
உத்தானபாதன்- அருள் உரோமபதன்
   என்று உளன். இவ் உலகை ஆள்வோன்;
 

புத்தான கொடுவினை யோடு- புற்றுப் போலப் பெருகும் கொடிய
வினைகளும்  அவற்றால்  விளையும்;  அருந்துயர் போய்  ஒளிப்ப-
அரிய  துன்பங்களும்  சென்று  நீங்க;  புவனம் தாங்கும்- நாட்டைக்
காத்து   ஆட்சி   புரியும்;   சத்தான  குணம்  உடையோன்- மிக
உண்மையான  குணம் உடையவனும்; தயையினொடும் தண்ணளியின்
சாலை    போல்வான்
-   தயைக்கும்  தண்ணளிக்கும்   இருப்பிடம்
போன்றவனும்;   எத்தானும்  வெலற்கு அரியான்-  எம்முறையிலும்
பகைவரால் வெல்ல அரியவனும்; மனு குலத்தே வந்து உதித்தோன்-
மனுவின் குலத்தில் பிறந்தவனும்  ஆன; இலங்கும் மோலி உத்தான
பாதன்
-  விளங்கும்  மணிமுடி தரித்த  உத்தான பாதன் என்னுமரசன்;
அருள்  உரோம  பதன்  என்று
-  பெற்ற மகனான  உரோம பதன்
என்னும்    பெயர்   பெற்ற;  இவ்வுலகை  ஆள்வோன்   உளன்-
இவ்வுலகத்தை எல்லாம் ஆள்கின்ற அரசன் ஒருவன் இருக்கிறான்.

இது     முதல்  21  பாடல்கள்  உரோமபத  மன்னன்   வரலாறு
கூறுவனவாம்.  புத்து: புற்று (புத்தான: புற்றாக வளர்ந்து  பெருகியுள்ள).
கொடுவினை:  கொடிய வினையாம். சத்: உண்மை. சாலை:  வழித்தடம்.
மோலி:     மகுடம்.    குணமுடையோன்.    சாலை     போல்வான்.
வெலற்கரியான்.    வந்துதித்தோன்   இவை   உத்தான    பாதனுக்கு
அடைமொழிகள்  உத்தான  பாதன்  மகன்  உரோம பதன்  ஆவான்.
மனுகுலம்: சுவாயம்பு மனுவின் குலம். கொடு வினை: பண்புத்தொகை. 35
 

215.

‘அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில்
   நெடுங் காலம் அளவது ஆக.
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம்
   பெருகுதலும். வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து. மா தானம்
   கொடுத்தும். வான் வழங்காது ஆக.